அப்படி போடு! வழக்கு போட்டவரே மன்னிப்பு கேட்டார்.. வன்முறை வழக்கில் விடுவிக்கப்பட்ட யுவராஜ் சிங்!

வன்முறை வழக்கில் விடுவிக்கப்பட்டார் யுவராஜ் சிங்!- வீடியோ

டெல்லி : 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட வன்முறை வழக்கு ஒன்றில் இருந்து யுவராஜ் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்ந்தவரே மன்னிப்பு கேட்டு வழக்கை முடித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் மற்றும் அவரது தாயார் மீது குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை தொடர்ந்தவர் அவரது சகோதரரின் முன்னாள் மனைவி அகன்ஷா சர்மா.

கருத்து வேறுபாடு வந்தது

கருத்து வேறுபாடு வந்தது

பழி வாங்கும் நோக்கில் அந்த வழக்கை தொடர்ந்து இருந்தார் அவர். யுவராஜ் சிங்கின் சகோதரர் ஜோராவர் சிங் - அகன்ஷா சர்மா திருமணம் நடந்து, அடுத்த ஆறு மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்தனர்.

குடும்ப வன்முறை

குடும்ப வன்முறை

எனினும், இவர்களின் விவாகரத்து வழக்கு சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து, இந்த மாதத்தில் தான் முடிவுக்கு வந்தது. இதன் இடையே அகன்ஷா சர்மா, பழி வாங்கும் நோக்கில் யுவராஜ் சிங் மற்றும் அவரது தாயார் ஷப்னம் சிங் மீது குடும்ப வன்முறை வழக்கை தொடர்ந்தார்.

யுவராஜ் சிங் இழுக்கப்பட்டார்

யுவராஜ் சிங் இழுக்கப்பட்டார்

2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், யுவராஜ் சிங் மற்றும் அவரது தாயார் ஷப்னம் சிங் தன் மீது வன்முறையாக நடந்து கொண்டதாக கூறி இருந்தார். இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் யுவராஜ் சிங் பெயர் இழுக்கப்பட்டது.

கிரிக்கெட் பிரபலம் யுவராஜ்

கிரிக்கெட் பிரபலம் யுவராஜ்

அவர் ஒரு கிரிக்கெட் பிரபலம். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் என்பதால், அவரது குடும்பத்தை இழிவுபடுத்த அவர் பெயர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது. தற்போது அது தான் உண்மை என தெரிய வந்துள்ளது.

யுவராஜ் குடும்பம் அறிக்கை

யுவராஜ் குடும்பம் அறிக்கை

இந்த வழக்கில் இருந்து தாங்கள் விடுபட்டதை குறிப்பிட்டு யுவராஜ் சிங் குடும்பம் சார்பாக ஒரு அறிக்கை ஊடகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தன் மீதான சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி அகன்ஷா சர்மா எங்களிடம் மன்னிப்பு கேட்டார், என குறிப்பிடப்பட்டுள்ளது

வாபஸ் வாங்கினார்

வாபஸ் வாங்கினார்

மேலும், அவரது குற்றச்சாட்டு எல்லாமே தவறானது மற்றும் சரியானதல்ல என்பதை ஒப்புக் கொண்டு, அதை வாபஸ் வாங்கி இருக்கிறார். கோடிக்கணக்கானவர்களின் அன்புக்குரிய யுவராஜ் சிங் எங்கள் குடும்பத்தில் ஒரு நபர் என்ற காரணத்திற்காகவே நாங்கள் எளிய இலக்காக மாறி விட்டோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

முயற்சி தோல்வி

முயற்சி தோல்வி

வழக்கு தொடர்ந்தவரே சமாதானம் பேசி, மன்னிப்பு கேட்டதை அடுத்து யுவராஜ் சிங் இந்த வன்முறை வழக்கில் இருந்து விடுபட்டு இருக்கிறார். அவரது புகழுக்கு களங்கம் கற்பிக்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Domestic Violence case against Yuvraj Singh dropped, as the accuser apologised and settled the case.
Story first published: Thursday, September 12, 2019, 15:06 [IST]
Other articles published on Sep 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X