For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு" - ஜஸ்ட் 16 ரன்னில்.. ஆட்டம் கண்ட இந்திய பெண்கள் அணி

பிரிஸ்டோல்: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மாபெரும் சொதப்பல் இது எனலாம். 167 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் போட்டு, பிறகு எப்படி சொதப்பி இருக்காங்க பாருங்க.

இந்தியா- இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனை டாமி பியுமோன்ட் 66 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 95 ரன்களும் விளாச, முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்ததுது.

 396 ரன்கள்

396 ரன்கள்

ஆனால், நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில், 9-வது விக்கெட்டுக்கு சோபியா டங்க்ளி உடன் அனியா ஷ்ரப்சோல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி யாரும் எதிர்பார்க்காத அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சோபியா அரைசதம் அடிக்க,, அனியா 47 ரன்னில் வெளியேறினார். அப்போது இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் ஸ்னே ராணா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

 167 ரன்கள் பார்ட்னர்ஷிப்

167 ரன்கள் பார்ட்னர்ஷிப்

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இருவரும் அரைசதம் அடித்து, செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பை கடந்து அசத்தினர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வெர்மா, 96 ரன்கள் எடுத்த நிலையில் கிராஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மறுபுறம், ஸ்மிரிதி மந்தனா 78 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்தது.

 அடுத்தடுத்து 5

அடுத்தடுத்து 5

ஆனால், அதன் பிறகு தான் ஆன்லைனில் படித்த சிவில் எஞ்சினியர் கட்டிய பில்டிங் சரிவதைப் போன்று, இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 167 - 0 என்றிருந்த இந்திய அணி, 183 - 5 என்ற நிலைக்குச் சென்றது. அடுத்த 16 ரன்களில் ஐந்து விக்கெட்டுகள் சரிந்தன. பூனம் ரவுத் 2 ரணிலும், ஷிகா பாண்டே ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் மிதாலி ராஜ் 2 ரன்னிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது.

 மிடில் ஆர்டர் மோசம்

மிடில் ஆர்டர் மோசம்

பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு என்பது போல, 167 எனும் மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த மந்தனா வெர்மா ஜோடியின் பங்கு, இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பலால் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Story first published: Friday, June 18, 2021, 19:57 [IST]
Other articles published on Jun 18, 2021
English summary
batting collapse Mandhana, Verma record opening - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X