For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘என்னையும், மனைவியையும் அவ்வளவு அசிங்கமா பேசுனாங்க’.. வேதனையா இருந்துச்சு..மனம் திறந்த சிஎஸ்கே வீரர்

தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ், தனக்கும் தனது மனைவிக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Faf Du plessis தனக்கு கொலைமிரட்டல் வந்ததாக அதிர்ச்சி தகவல்! | Oneindia Tamil

தென்னாப்பிரிக்க அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

ஐபிஎல் முடிந்து தாய் நாட்டிற்கு திரும்பியுள்ள அவர், 2011ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை மனம் திறந்துள்ளார்.

2011 உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை

2011ம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாகும். ஏனென்றால் தோனியின் தலைமையில் அப்போது தான் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. இந்திய ரசிகர்கள் உற்சாகமாக இருந்த அந்த நேரத்தில் தான் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான டூப்ளசிஸுக்கு மோசமான சம்பவம் நடந்துள்ளது.

 காலிறுதிப்போட்டி

காலிறுதிப்போட்டி

அந்த தொடரின் காலிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டேனியல் விட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணி 121 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. டிவில்லியர்ஸும் ரன் அவுட்டானர். இதன்பின்னர் அணியை மீட்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டூப்ளசிஸ் 36 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றினார். மேலும் ரன் ஓடும் போது நியூசிலாந்து வீரர் கெயில் மில்ஸை தள்ளிவிட்டதற்காக போட்டிக்கட்டணத்தில் 50% அபராதம் செலுத்தினார்.

மனவருத்தம்

மனவருத்தம்

அந்த போட்டிக்கு பிறகு எனக்கும் எனது மனைவிக்கு அதிகளவில் கொலை மிரட்டல்கள் வந்தது. சமூக வலைதளங்களில் எங்களை குறித்து மிகவும் கீழ் தரமாக விமர்சித்தனர். அதனை தற்போது சொல்லக்கூட என்னால் முடியவில்லை. அந்த அளவிற்கு மோசமாக பேசினர். அனைத்து வீரர்களும் வாழ்வில் இதுபோன்ற சம்பவங்களை கடந்துதான் வந்திருப்பார்கள். இதனால் தான் நான் எந்த அணிக்கு சென்றாலும், அங்கு பாதுகாப்பான இடத்தை கடுமையாக உழைக்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் போற்றும் வீரர்கள்

இந்தியர்கள் போற்றும் வீரர்கள்

தென்னாப்பிரிக்க ரசிகர்களால் அப்போது மிகவும் விமர்சிக்கப்பட்ட டூப்ளசிஸ் தான் தற்போது இந்திய ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடும் அவர், சமீபத்தில் நடந்த தொடரில் கூட சிறப்பாக செயல்பட்டார். 7 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 320 ரன்களை குவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சிறந்த வீரருக்காக கொலை மிரட்டல் எல்லாம் வந்தது என ரசிகர்கள் மனவருத்தப்பட்டுள்ளனர்.

Story first published: Wednesday, May 19, 2021, 10:15 [IST]
Other articles published on May 19, 2021
English summary
Du Plessis has revealed that he and his wife received death threats
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X