ஜஸ்ட் 22 வயசு.. ஆனா அடி, இடி மாதிரி இறங்குது.. 24 பந்தில் வெலவெலக்க வைத்த "பட்டாஸ்"

லண்டன்: இங்கிலாந்து டி20 அணிக்கென்று ஒரு முரட்டு டி20 வீரர் உருவாகி வருகிறார். அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருக்கு.

ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் தொடரில் சாதிப்பவர்கள் அப்படியே, தேசிய அணியில் இடம் பிடித்து சாதிப்பார்கள். அதேபோல், இந்தியாவில் ஐபிஎல் அறிமுகமான பிறகு, அதில் சாதிக்கும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கத் தொடங்கினர்.

இந்திய அணிக்கு உள்ள பெரிய தலைவலி... ஓப்பனிங் ஜோடியில் சிக்கல்.. களமிறங்குகிறாரா மயங்க் அகர்வால்?

இப்படி, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என்று ஒவ்வொரு நாட்டிலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடர்களை தாண்டி, டி20 தொடர்களில் இம்ப்ரெஸ் செய்து வீரர்கள் தேசிய அணியில் இடம் பிடித்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்தில் ஒரு தரமான இளம் வீரர் தயாராகி வருகிறார்.

223 ரன்கள்

223 ரன்கள்

இங்கிலாந்தில் இப்போது T20 Blast 2021 எனும் கிரிக்கெட் சீரிஸ் நடந்து கொண்டிருக்கிறது. இதில், நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் Middlesex, Surrey அணிகள் மோதின. சர்ரே அணியில் ஜேசன் ராய், சாம் கர்ரன், டாம் கர்ரன் ஆகிய இந்திய ரசிகர்களுக்கு முகம் தெரிந்த வீரர்கள் விளையாடினர். முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

7 பவுலர்கள்

7 பவுலர்கள்

இதில், நம் செய்தியின் நாயகன், அந்த 22 வயது இளைஞன் வில் ஜேக்ஸ், ஓப்பனராக களமிறங்கி 24 பந்துகளில் 70 ரன்களை பறக்கவிட்டார். இதில் 9 பவுண்டரிகளும், 5 பிரம்மாண்ட சிக்ஸர்களும் அடங்கும். இவரது பேட்டிங்கை கட்டுப்படுத்த மிடில்செக்ஸ் அணி கேப்டன் 7 பவுலர்களை பயன்படுத்தியிருக்கிறார். அவரது அடிக்கும், அவரது வயசுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. ஆனால், பேட்டில் பந்து பட்டால், ஆடியன்ஸ் ஃபீல்டர்களாகின்றனர். பீல்டர்கள் ஆடியன்ஸ் ஆகிவிடுகின்றனர்.

தில் ஆல்ரவுண்டர்

தில் ஆல்ரவுண்டர்

வில் ஜேக்ஸ் ஒரு பவுலிங் ஆல் ரவுண்டர். பொதுவாக ஸ்பின் பவுலிங் ஆல்- ரவுண்டர்களை சில அதிமேதாவிகள் bits-and-pieces cricketers என்று அழைப்பார்கள். ஜேக்ஸையும் அப்படித்தான் நினைத்தார்கள், அழைத்தார்கள். ஆனால், இவரோ தனது ஆக்ரோஷ பேட்டிங்கால், அனைவரையும் வாயடைத்து விக்கித்து நிற்க வைத்துவிடுகிறார். இங்கிலாந்தின் அண்டர்-9 தொடங்கி அண்டர்-19 வரை அனைத்து வகை கிரிக்கெட்டிலும், தனது சக வீரர்களின் எபிலிட்டியை விட 10 மடங்கும் அதிகம் வெளிக்காட்டியதில் தேர்வார்களை வாயடைக்க வைத்தவர் வில் ஜேக்ஸ்.

விரைவில் இடம்

விரைவில் இடம்

இவரது அபாரமான ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் பார்த்து, நியூசிலாந்தில் 2018ல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இவரை துணை கேப்டனாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்க. விரைவில், இங்கிலாந்து டி20 அணிக்கு ஒரு மெகா அதிரடி ப்ளஸ் ரிஸ்ட் ஸ்பின்னர் இடம் பிடிக்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
will jacks smashes 24 balls 70 T20 Blast 2021 - வில் ஜேக்ஸ்
Story first published: Friday, June 11, 2021, 17:16 [IST]
Other articles published on Jun 11, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X