ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றது சாதனை ஜோடி, சங்ககாரா-ஜெயவர்த்தனே!

சிட்னி: உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களாக வலம் வந்த இலங்கையின் குமார் சங்ககாரா மற்றும் மகிலா ஜெயவர்த்தனே ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். உலக கோப்பையின் காலிறுதியில் இலங்கை தோற்கடிக்கப்பட்டு வெளியேறியதால், இவ்விரு ஜாம்பவான்களுக்கும் இன்றே கடைசி போட்டியாக அமைந்துவிட்டது.

இந்தியாவின், சச்சின், கங்குலி, ஆஸ்திரேலியாவின் மெக்ராத், வார்னே, தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட், பொல்லாக், வெஸ்ட் இண்டீசின் வால்ஸ், அம்ப்ரோஸ், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றே, உலக கிரிக்கெட் அரங்கில் பெயர் பெற்ற இரட்டையர்கள் இலங்கையின் குமார் சங்ககாரா மற்றும் மகிலா ஜெயவர்த்தனே. நடுவரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கும் இவர்களை கண்டால் உலகின் அத்தனை பவுலர்களுக்கும் சிம்ம சொப்பனம்.

டெஸ்ட் போட்டிகளில் சங்ககாரா

டெஸ்ட் போட்டிகளில் சங்ககாரா

சங்ககாரா 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12 ஆயிரத்து 203 ரன்களை குவித்துள்ளார். 58.66 இவரது பேட்டிங் சராசரியாகும். கிட்டத்தட்ட ஒரு போட்டிக்கு சராசரியாக 60 ரன்களை குவித்து வந்துள்ளார் சங்ககாரா. இதில் 38 சதங்கள், 51 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 319 ரன்கள் விளாசியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இப்படி..

ஒருநாள் போட்டிகளில் இப்படி..

403 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 14 ஆயிரத்து 189 ரன்கள் குவித்த சங்ககாராவின் பேட்டிங் சராசரி 41.97 ஆகும். இதில் 25 சதங்களும், 93 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 169 ரன்கள் குவித்துள்ளார்.

20-20

20-20

56 டி20 போட்டிகளில் ஆடியுள்ள சங்ககாரா 1382 ரன்கள் விளாசியுள்ளார். சராசரி 31.40. அதிகபட்சமாக 78 ரன்களை ஒரு போட்டியில் குவித்துள்ள சங்ககாரா 8 அரைசதங்கள் விளாசியுள்ளார்.

ஜெயவர்த்தனே டெஸ்ட் திறமை

ஜெயவர்த்தனே டெஸ்ட் திறமை

ஜெயவர்த்தனே 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11814 ரன்களை குவித்து 49.84 என்ற சராசரியை வைத்துள்ளார். 34 சதங்கள், 50 அரை சதங்கள் விளாசிய ஜெயவர்த்தனே, ஒரு போட்டியில் 374 ரன்கள் குவித்தார்.

ஒருநாள் போட்டிகளில்..

ஒருநாள் போட்டிகளில்..

447 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஜெயவர்த்தனே, 12646 ரன்களை குவித்து 33.45 என்ற சராசரி வைத்திருந்தார். இதில் சதங்கள் 19 மற்றும் அரை சதங்கள் 77 அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 144.

ஜெயவர்த்தனே 20-20

ஜெயவர்த்தனே 20-20

55 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஜெயவர்த்தனே, 1493 ரன்களை குவித்து 31.76 என்ற சராசரியை பராமரித்துள்ளார். 1 சதம், 9 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்ச ரன் 100 ஆகும்.

பயணம் நிறைவு

பயணம் நிறைவு

உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக இவ்விரு ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் அறிவித்திருந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுடன் இன்று இலங்கை பெற்ற தோல்வியால், அவர்கள் பயணம் இன்றோடு முடிவுக்கு வந்தது. பல நாட்டு வீரர்களும், இரு வீரர்களையும் வாழ்த்தி தகவல்களை அனுப்பி வருகின்றனர்.

டெஸ்ட்டில் சங்ககாராவை பார்க்கலாம்

டெஸ்ட்டில் சங்ககாராவை பார்க்கலாம்

ஜெயவர்த்தனேவை பொறுத்தளவில், ஒருநாள் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், சங்ககாரா இவ்வாண்டு இறுதிவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடுவார். மற்றபடி பல நாடுகளிலும் நடைபெறும் ஐபிஎல் போன்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இவ்விருவரும் ஆட உள்ளனர்.

 
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Now, Jayawardene is lost to the international game, retired from all forms after an career that started in 1997. Sangakkara is not done with red-ball cricket just yet - he will play on in Tests until later this year - while both men will continue to play in domestic leagues around the world.
Story first published: Wednesday, March 18, 2015, 17:18 [IST]
Other articles published on Mar 18, 2015
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more