“இப்படியா சீட்டிங் செய்யுறது” மேத்யூ வேட் செய்த தவறான விஷயம்.. கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை- வீடியோ

பெர்த்: ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மேத்யூ வேட் விதிகளுக்கு புரம்பாக பவுலரை தள்ளிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டி20 போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது.

இந்தியாவுக்கு வந்து இறங்கிய அடுத்த இடி.. தீபக் சாஹருக்கு காயம்.. டி20 உலககோப்பைக்கு சந்தேகம் இந்தியாவுக்கு வந்து இறங்கிய அடுத்த இடி.. தீபக் சாஹருக்கு காயம்.. டி20 உலககோப்பைக்கு சந்தேகம்

முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

சர்ச்சையான சம்பவம்

சர்ச்சையான சம்பவம்

இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் போது, ஆட்டத்தில் 17வது ஓவரை மார்க் வுட் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 3வது பந்தை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தூக்கி அடிக்க முயன்ற போது பேட்டில் டாப் எட்ஜாகி பவுலருக்கே கேட்ச்சாக சென்றது.

என்ன ஆனது

என்ன ஆனது

ஒரு புறம் மார்க் வுட் தன்னிடம் வந்த கேட்ச்-ஐ பிடிப்பதற்காக முற்பட்டார். மற்றொருபுறம் நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த மேத்யூ வேட் பாதி களத்திற்கு ரன் ஓட முயன்றுவிட்டு, ரன் அவுட் ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தில் மீண்டும் தன் இடத்திற்கு திரும்பினார். அப்போது மார்க் வுட்டை கேட்ச் பிடிக்கவே விடாமல் இழுத்துப்பிடித்து தடுத்தார். இதனால் அழகான கேட்ச் மிஸ்ஸானது.

 அதே ஓவரில் பலன்

அதே ஓவரில் பலன்

பவுலர் கேட்ச் பிடிக்க சென்ற போது எப்படி ஒருவர் தடுத்து நிறுத்து முடியும், இது கிரிக்கெட் விதிகளுக்கு புறம்பானது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். என்னதான் வார்னரை மேத்யூவ் வேட் காப்பாற்றினாலும், அதே ஓவரில் அதற்கான பலன் கிடைத்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் டேவிட் வார்னர் விக்கெட்டை பறிகொடுத்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
England star Mathew wade blocks Mark wood to escape from the wicket creates controversy in England vs Australia in 1st T20 match
Story first published: Sunday, October 9, 2022, 21:04 [IST]
Other articles published on Oct 9, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X