For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என்னா பேட் மட்டும் தனியா நிக்குது”.. ஜோ ரூட் செய்த மேஜிக்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்- வீடியோ!

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டின் பேட் மட்டும் களத்தில் தனியாக நின்றுக்கொண்டிருந்த வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நார்வே செஸ் போட்டி.. உலகின் நம்.1 வீரரை சாய்த்து விஸ்வநாதன் ஆனந்த் அபாரம்.. அதுவும் எப்படி தெரியுமா?நார்வே செஸ் போட்டி.. உலகின் நம்.1 வீரரை சாய்த்து விஸ்வநாதன் ஆனந்த் அபாரம்.. அதுவும் எப்படி தெரியுமா?

ஜோ ரூட் பேட்டிங்

ஜோ ரூட் பேட்டிங்

முதல் இன்னின்ஸில் 141 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணியை, 2வது இன்னிங்ஸில் வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் ஜோ ரூட். 277 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியில் முன்னணி வீரர்கள் ஏமாற்றினர். எனினும் தூண் போன்று நின்ற ஜோ ரூட் 170 பந்துகளை சந்தித்து 12 பவுண்டர்களுடன் 115 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஆச்சரிய நிகழ்வு

ஆச்சரிய நிகழ்வு

இந்நிலையில் ரூட்டின் பேட்டிங்கை விட, அவரின் பேட் தான் அதிக கவனம் பெற்றுள்ளது. 2வது இன்னிங்ஸின் போது நான் ஸ்ட்ரைக்கரில் நின்றுக்கொண்டிருந்த ஜோ ரூட் , தனது பேட்டை கையில் இருந்து அப்படியே விட்டுவிட்டார். ஆனால் பேட் கீழே விழாமல் தானாக நேராக நின்றுக்கொண்டிருந்தது. பேட்டில் எந்தவித அசைவுகளும் இல்லை.

காரணம் என்ன

காரணம் என்ன

வழக்கமாக பேட்ஸ்மேன்கள் தங்களது கைகளில் பேட்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள். ஜோ ரூட் மட்டும், தனது பேட்டை அதுவாக நிற்பது போன்று வைத்துவிட்டு, ரன் ஓடும் போது மட்டும் எடுத்துக்கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். அவர் அப்படி என்ன மேஜிக் செய்கிறார் என குழம்பினர். அவரின் பேட்டை மட்டும் அடிப்பகுதியில் தட்டையாக செய்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பெரும் சாதனை

இங்கிலாந்து அணியின் தொடர் சொதப்பல் காரணமாக, கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் நீக்கப்பட்டார். எனினும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பேட்டிங்கில் தனது திறமையை காட்டி வருகிறார். இந்த முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது மூலம், இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் 10,000 டெஸ்ட் ரன்களை அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 6, 2022, 15:02 [IST]
Other articles published on Jun 6, 2022
English summary
ENG vs NZ: Joe Root's bat balancing in a wizardry way storms internet
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X