For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் அசத்தல்.. என்ன கொடுமை சார் இது?

ராவல்பிண்டி : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புருக் ஒரே ஓவரில் ஆறு பவுண்டர்கள் விளாசி அசத்தி இருக்கிறார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ராவல்பிண்டி நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வாழ்க்கையில் கபடி ஆடினர்.

பாகிஸ்தானுக்கு அசிங்கம்.. வரலாற்றில் முதல் முறையாக இங்கி, செய்த விஷயம்.. ரசிகர்கள் கோபம்- என்ன ஆனது பாகிஸ்தானுக்கு அசிங்கம்.. வரலாற்றில் முதல் முறையாக இங்கி, செய்த விஷயம்.. ரசிகர்கள் கோபம்- என்ன ஆனது

மெக்குல்லம் மேஜிக்

மெக்குல்லம் மேஜிக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்கள் எப்போதும் மெதுவாக விளையாடுவது அவருடைய வழக்கம்.இந்த நிலையில் தான் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்குல்லம் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக வந்ததிலிருந்து அந்த அணியின் போக்கையே தலைகீழாக மாற்றி விட்டார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் ஆக இருந்தாலும் சரி அடித்து ஆடுங்கள் என்று அவர் இங்கிலாந்து வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறார் .இந்த முறைக்கு ரசிகர்கள் பேஸ்பால் என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் ராவல்பிண்டி ஆடுகளம் பந்துவீச்சுக்கு சற்றும் லாயக்கு இல்லாத சிமெண்ட் தரை போல் இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

சுத்தமாக எடுப்படவில்லை

சுத்தமாக எடுப்படவில்லை

பொதுவாக ஆசிய ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும். ஆனால் இதில் பந்து பெயருக்கு கூட திரும்பவில்லை. இதனால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக ஆட்டத்தின் 68வது ஓவரில் சவுது சக்கில் என்ற அறிமுக சுழற் பந்துவீச்சாளர் இங்கிலாந்து வீரர் ஹாரி புக்கிற்கு பந்து வீசினார்.

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்

ஆடுகளம் சுத்தமாக பந்து வீச்சுக்கு எடுபடாததால் EA கிரிக்கெட் 2007 கம்ப்யூட்டர் வீடியோ கேம் போல் 6 பந்திற்கும் 6 பவுண்டர்களை அடித்து ஹாரி புருக் அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு பவுண்டர்களை விளாசிய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார். 1982 ஆம் ஆண்டு இந்திய வீர சந்திப்பட்டேல், 2004 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில், 2006 ஆம் ஆண்டு ராம்நரேஷ் சர்வான், 2007 ஆம் ஆண்டு ஜெயசூர்யா ஆகியோர் இந்த சாதனையை ஏற்கனவே படைத்திருக்கிறார்கள்.

Story first published: Thursday, December 1, 2022, 19:30 [IST]
Other articles published on Dec 1, 2022
English summary
England batsman Harry brook scored 6 boundaries in a over vs pakistan 1st test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X