கிரிக்கெட்டில் இருந்து டி-20 போட்டியை நீக்க வேண்டும்.. இங்கிலாந்து கோச் ஆவேசம்.. என்ன காரணம்?

Posted By:
டி20 போட்டிகளை தடை செய்ய கோரும் இங்கிலாந்து பயிற்சியாளர்- வீடியோ

லண்டன்: கிரிக்கெட்டில் இருந்து டி-20 போட்டியை நீக்க வேண்டும் என்று இங்கிலாந்து கோச் பேசி இருக்கிறார். திரோவர் பேலிஸ் வெளியிட்ட இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

டி-20 போட்டி ஏன் நீக்க வேண்டும் என்று அவர் இரண்டு காரணம் குறிப்பிட்டு இருக்கிறார். சமீப காலமாக டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணி சரியாக விளையாடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி-20 தரவரிசையில் அந்த நாடு ஏழாவது இடத்தில் மட்டுமே இருக்கிறது. திரோவர் பேலிஸ் இப்படி கூறுவார் என்று இங்கிலாந்து அணியினர் கூட நினைத்து இருக்க மாட்டார்கள்.

யார்

யார்

இவர் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் ஐபிஎல், பிபிஎல் என இரண்டு பெரிய டி-20 தொடர்களிலும் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து விளையாடும் மும்முனை போட்டி நடந்து வருகிறது. இதில் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தகுதி பெற்றது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இங்கிலாந்து வென்றது.

இருக்க கூடாது

இருக்க கூடாது

இந்த தோல்விக்கு பின்பே இவர் இப்படி பேசி இருக்கிறார். டி-20 போட்டிகள் வீரர்களை பாதிக்கும் என்றுள்ளார். வீரர்களின் விளையாட்டு திறனை மொத்தமாக டி-20 போட்டிகள் கெடுக்கும் என்றும் அவர் பேட்டி அளித்துள்ளார்.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

டி-20 போட்டிகளுக்கு கண்டிப்பாக உலகக்கோப்பை வைக்க கூடாது. புதிய வீரர்களை தேர்வு செய்ய மட்டுமே இந்த போட்டி நடத்த வேண்டும். அதுதான் பயிற்சியாளர்களுக்கு நல்லது என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, February 19, 2018, 14:51 [IST]
Other articles published on Feb 19, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற