For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடா அடடா... இது மகா கொடுமைடா... என்ன ஒரு பரிதாபமான தோல்வி பாருங்கள்!

By Aravinthan R

லண்டன்: வெற்றிக்கு 3 ரன்கள்.. கையில் 7 விக்கெட், 2 ஓவர்கள்.. இப்படி ஒரு சாதகமான சூழலில், ஒரு சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், எந்த அணியாவது தோல்வி அடையுமா? ஆனால், இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் கிளப் அணி தோற்றுப் போய் உள்ளது.

அதுவும், 11 பந்துகளில் ஏழு விக்கெட்களை இழந்து பரிதாபமான வகையில். உலக சாதனை நிகழ்த்தி, ஆஸ்திரேலியா அணியை ஒயிட்வாஷ் செய்து, இரண்டு நாட்கள்க கூட ஆகாத நிலையில் இங்கிலாந்தில் இந்த சோதனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு கீழ் செயல்படும் கிளப் அணிகள் கிளப் சாம்பியன்ஷிப்புக்கான பல்வேறு கட்ட போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதில் குரூப் 12இல் நடந்த இறுதிப் போட்டியில் தான் இந்த கூத்து நடந்துள்ளது.

13 அணிகளின் மோதல்

அந்த க்ரூப்பில் மொத்தம் பதிமூன்று அணிகள். அவற்றிடையே நடந்த நாக்-அவுட் போட்டிகளின் அடிப்படையில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப் போட்டி

பீட்டர்போரோ சிசி அணியும், ஹை வைகோம்ப் சிசி அணியும் மோதிய இறுதிப் போட்டியில், முதலில் ஆடிய பீட்டர்போரோ அணி 188 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆட வந்தது ஹைகோம்ப் அணி.

பரிதாபமான முறையில் அவுட்

பரிதாபமான முறையில் அவுட்

சிறப்பாக விளையாடி வந்த அந்த அணி 38வது ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்து அபாரமான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்து நடந்ததுதான் பரிதாபம். 39.5வது ஓவரில் அது அனைத்து விக்கெட்களையும் இழந்து 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கீரன் ஜோன்ஸ் குண்டு

கீரன் ஜோன்ஸ் குண்டு

ஹைகோம்ப் அணி வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் கீரன் ஜோன்ஸ் மற்றும் தன்யால் மாலிக் ஆகியோர்தான். 38வது ஓவரில் கீரன் ஜோன்ஸ், முதல் நான்கு பந்துகளில் ஹைகோம்ப் அணியின் நான்கு விக்கெட்களை சாய்த்து, அந்த ஓவரையும் மெய்டனாக வீசினார்.

அடுத்த ஓவரில் அல்பாயுசு

அடுத்த ஓவரில் அல்பாயுசு

அடுத்த ஓவரில், ஹைகோம்ப் அணியில் 58 ரன்கள் எடுத்து இருந்த நாதன் ஹாக்ஸ் களத்தில் நிற்க, எப்படியும் அந்த அணி வென்று விடும் என நினைத்து, பீட்டர்போரோ அணி கேப்டன், தன் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளர் தன்யால் மாலிக்கிடம் பந்தை கொடுத்தார்.அவர் வந்து சூறாவளியென ஹைகோம்ப்பை காலி செய்தார்.

சீட்டுக் கட்டு போல

சீட்டுக் கட்டு போல

மிச்சமிருந்த மூன்று விக்கெட்களையும் மாலிக் எடுத்து அசத்தினார். ஹைகோம்ப் அணி 187 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இறுதிப் போட்டியை இழந்தது. வெறும் 11 பந்துகளில் ஒரு அணியின் தலையெழுத்து டகால்டியாகிப் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிதாபமய்யா

பரிதாபமய்யா

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இணையத்தில், இந்த கிளப் அணியை வைத்து கலாய்த்து வருகிறார்கள். இந்த செய்தி #collapzilla என்ற பெயரில் டிரென்ட் ஆகி வருகிறது.

Story first published: Tuesday, June 26, 2018, 18:13 [IST]
Other articles published on Jun 26, 2018
English summary
England cricket club lost a final match with last 7 wickets fell for 1 run. This #collapzilla is now trending worldwide.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X