பாக். டூரில் நடந்த அவலம்.. இங்கிலாந்து அணியில் 14 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ரசிகர்கள் கவலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியில் வீரர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 17ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு அசிங்கம்.. வரலாற்றில் முதல் முறையாக இங்கி, செய்த விஷயம்.. ரசிகர்கள் கோபம்- என்ன ஆனது பாகிஸ்தானுக்கு அசிங்கம்.. வரலாற்றில் முதல் முறையாக இங்கி, செய்த விஷயம்.. ரசிகர்கள் கோபம்- என்ன ஆனது

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லாமல் இருந்த அணிகள் தற்போது அங்கு செல்ல தொடங்கியுள்ளன. அந்தவகையில் கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய இங்கிலாந்து அணி, 17 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் முதல்முறையாக அங்கு சென்றுள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 விநோத சிக்கல்

விநோத சிக்கல்

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இங்கிலாந்து அணி வீரர்களுக்கு விநோத பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட மொத்தம் 14 பேருக்கு புதிதாக வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் தனியார் விடுதியில் உள்ள அவர்களுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டை வலிகள், வயிற்றுப்பிரச்சினைகள் என அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது.

24 மணி நேரம் தான்

24 மணி நேரம் தான்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நாளைய தினம் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்படி இருக்கையில் பாதி வீரர்கள் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் குணமடைந்துவிடும் எனக்கூறியுள்ள போதும், முக்கிய வீரர்கள் சிலர் விளையாடவில்லை என்றாலும், ஆட்டம் பாதிக்கப்படும் என தெரிகிறது.

உணவு பிரச்சினை

உணவு பிரச்சினை

முன்னதாக பாகிஸ்தானில் உணவு சரியில்லை என்றும், உடல்நிலை கெடுகிறது என்றும் கூறியிருந்த இங்கிலாந்து அணி, தங்களுடன் ஒரு ஸ்பெஷல் சமையல் கலைஞரையும் அழைத்துச் சென்றனர். டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக பாகிஸ்தான் சென்றிருந்தது. அப்போது தான் இந்த உணவுப்பிரச்சினை இருந்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
England Cricket team players got sick on Pakistan Tour, will first Test Match happen?
Story first published: Wednesday, November 30, 2022, 13:59 [IST]
Other articles published on Nov 30, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X