பாகிஸ்தானுக்கு அசிங்கம்.. வரலாற்றில் முதல் முறையாக இங்கி, செய்த விஷயம்.. ரசிகர்கள் கோபம்- என்ன ஆனது

லார்ட்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்துள்ள ஒரு விஷயம் பாகிஸ்தானை அசிங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்து ஆச்சரியம் தந்தது.

இதனையடுத்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தரவரிசையில் அதிரடி மாற்றம்..சூர்யகுமாருக்கு சரிந்த புள்ளிகள்.. இங்கிலாந்து வீரர்கள் முன்னேற்றம் டி20 தரவரிசையில் அதிரடி மாற்றம்..சூர்யகுமாருக்கு சரிந்த புள்ளிகள்.. இங்கிலாந்து வீரர்கள் முன்னேற்றம்

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லாமல் இருந்த மற்ற நாட்டு அணிகள் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அந்தவகையில் கடந்த 2005ம் ஆண்டு கடைசியாக பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய இங்கிலாந்து அணி, 17 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் முதல்முறையாக அங்கு செல்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த தொடர் டிசம்பர் 1 முதல் 17 வரை நடைபெறவுள்ளது.

 வினோத சம்பவம்

வினோத சம்பவம்

இந்நிலையில் பாகிஸ்தான் செல்வதற்காக இங்கிலாந்து செய்துள்ள ஒரு விஷயம் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வரலாற்றில் முதல்முறை இங்கிலாந்து அணியுடன் ஒரு சமையல் கலைஞரும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ளார். பாகிஸ்தானிலும் உலக தரம் வாய்ந்த சமையல் கலைஞர்கள் உள்ளனர். இருப்பினும் அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவு ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்ற இங்கிலாந்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அப்போது உள்ளூர் ஹோட்டல் உணவுகளும், மைதான அறையில் தயாரிக்கப்பட்ட உணவும் இங்கிலாந்து வீரர்களுக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தியுள்ளது. பலரும் வயிற்றுப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். இதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மெக்கல்லம் பிடிவாதம்

மெக்கல்லம் பிடிவாதம்

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் உணவு விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக உள்ளார். அவர் பொறுப்பேற்றவுடன் எடுத்த முதல் முடிவே, அணியின் நியூட்ரிஷனை நீக்கியது தான். ஆனால் தற்போது அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு தங்களுக்கு அசிங்கம் என பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
England Team Decision for travel dissappoints pakistan team and fans ahead of 3 match test series
Story first published: Tuesday, November 22, 2022, 15:24 [IST]
Other articles published on Nov 22, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X