For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றியோ, தோல்வியோ.. எதுவானாலும் சரி.. டிராவில் செய்வதில் விருப்பமில்லை.. பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்!

ராவல்பிண்டி: டெஸ்ட் போட்டியில் டிரா செய்யும் என்னத்தோடு விளையாட விரும்பவில்லை. அதை நாங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டோம். வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் தோல்வியடைய வேண்டும் என்று இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதுல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் மண்ணில் 22 ஆணடுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில், பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து பெறும் 3வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இதுவரை நடைபெற்ற டெஸ்ட் கிரக்கெட்டிலேயே இது போன்று பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை வேறு எங்கேயும் பார்த்திருக்க முடியாது. அந்த அளவு சிமெண்ட் தரை பிட்சில் இங்கிலாந்து அணி தனது அபார பந்துவீச்சால் வெற்றி பெற்று இருக்கிறது.

இங்கிலாந்து எடுத்த பெரிய ரிஸ்க்.. கிளைமாக்சை நெருங்கிய பாக். டெஸ்ட்.. 2வது இன்னிங்சிலும் ரன் வேட்டை இங்கிலாந்து எடுத்த பெரிய ரிஸ்க்.. கிளைமாக்சை நெருங்கிய பாக். டெஸ்ட்.. 2வது இன்னிங்சிலும் ரன் வேட்டை

கேப்டன் ஸ்டோக்ஸ்

கேப்டன் ஸ்டோக்ஸ்

இந்த வெற்றிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்ய எடுத்த முடிவும், வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதமும் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் தோல்விக்கு அஞ்சாமல் இங்கிலாந்து அணி செயல்படுவதற்கும் பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக அமைந்தார்.

பென் ஸ்டோக்ஸ் பேட்டி

பென் ஸ்டோக்ஸ் பேட்டி

இந்த வெற்றி குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், இந்த போட்டிக்கு முன் அணியில் உள்ள வீரர்களுக்கு என்னவானது என்று அனைவருக்கும் விளக்க முடியாது. ஜாக் லீச் மற்றும் போப் ஆகியோர் கடைசி நிமிடத்தில் தான் விளையாட முடியும் என்று தகவல் கிடைத்தது. அவர்களும் களம் புக தயாராக இருந்தார்கள். அதேபோல் கடந்த 8 முதல் 9 போட்டிகளாக நானும், மெக்கல்லமும் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதனால் எதிரணியை பற்றி கவலைப்படாமல், எங்கள் அணியில் செய்ய வேண்டிய முன்னேற்றத்தையே பார்க்கிறோம்.

டிரா செய்ய விருப்பமில்லை

டிரா செய்ய விருப்பமில்லை

இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது. அதனால் பேட்ஸ்மேன்கள் தங்களை நிரூபிக்க நல்ல களமாக அமைந்தது. பாகிஸ்தான் மண்ணில் நாங்கள் விரும்பிய கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் களமிறங்கினோம். எப்போதுமே எனக்கு டிரா செய்வதற்காக விளையாடுவதில் நாட்டம் இருந்ததில்லை. அதேபோல் ஓய்வறையில் உள்ள வீரர்களுக்கும் டிரா செய்வதில் விருப்பமில்லை.

சிறந்த வெற்றி இது

சிறந்த வெற்றி இது

போட்டியென்றால் வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் தோல்வியடைய வேண்டும். இன்று பந்தை ரிவைஸ் செய்ய முடிந்தது. குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகியோரின் செயல்பாடுகள் அருமையாக இருந்தது. சரியாக ஆட்டம் முடிவதற்கு 8 நிமிடங்கள் முன்பாக வெற்றியை பெற்றுள்ளோம். எனக்கு தெரிந்து, இங்கிலாந்து அணி பெற்ற வெற்றிகளில் இந்தப் போட்டி மிகச்சிறந்த ஒன்றாகும் இருக்கும் என்று தெரிவித்தார்.

Story first published: Monday, December 5, 2022, 19:40 [IST]
Other articles published on Dec 5, 2022
English summary
I don't want to play with a draw in a Test match. We would never want that. England Test captain Ben Stokes has said that he must win or fail.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X