For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு அணி.. எவனும் பார்க்க மாட்டான்.. ஐசிசியை போட்டு தாக்கிய பென் ஸ்டோக்ஸ்

லண்டன் : தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு அணியை தேர்வு செய்யும் முறையை கிரிக்கெட் சங்கங்கள் கடைபிடிப்பதாக பென் ஸ்டோக்ஸ் கூறினார். சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள வீரர் பென் ஸ்டோக்ஸ். இவர் தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக விளங்கி வருகிறார்.

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால், தம்மால் இனி ஒருநாள் போட்டியில் விளையாட முடியாது என்று கூறி, சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து விலகினார். ஆனால் தற்போது, வரும் அக்டோபர் மாதம் உலககோப்பை போட்டிகள் நடைபெறுவதால் ஸ்டோக்சை ஓய்விலிருந்து திரும்பி வரும் படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு எடுத்துள்ளார். இதற்கு முதல் படியாக ஐபிஎல் போட்டியில் விளையாட தனது பெயரை கொடுத்த ஸ்டோக்ஸ், 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார்.

 பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மாற்றம்.. ரமீஸ் ராஜாவுக்கு ஆப்பு.. புதிய தலைவர் யார் தெரியுமா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மாற்றம்.. ரமீஸ் ராஜாவுக்கு ஆப்பு.. புதிய தலைவர் யார் தெரியுமா?

மாற்ற நினைத்தேன்

மாற்ற நினைத்தேன்

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியத்துவம் இல்லாத போட்டிகள் அதிகமாக நடைபெற்று வருவதாக கிரிக்கெட் வீரர் குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு டி20 லீக் தொடர்களால் டெஸ்ட் கிரிக்கெட் அதன் முக்கியத்துவத்தை ரசிகர்களிடையே இழந்து வருவதாக சாடிய ஸ்டோக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட் குறித்து நிலவி வரும் பொதுவான கருத்து தமக்கு பிடிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

 உண்மையான வெற்றி

உண்மையான வெற்றி

அதனால் போட்டியை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற வேண்டும் என நினைத்து தான் இங்கிலாந்து தற்போது டெஸ்டில் அதிரடியை காட்டுவதாக கூறினார். .டெஸ்ட் கிரிக்கெட் தாண்டி பல்வேறு வீரர்களுக்கு பல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய ஸ்டோக்ஸ், . ஆனால் தமக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தான் பிடிக்கும் என்று தெரிவித்தார். டெஸ்ட் போட்டியில் என்ன நடக்கப் போகிறது என்று ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டால், அது தான் உண்மையான வெற்றி என்று ஸ்டோக்ஸ் கூறினார்.

கவனம் செலுத்துங்கள்

கவனம் செலுத்துங்கள்

கிரிக்கெட் போட்டிகளை நடத்த அட்டவணையை தயாரிக்கும் போது ஐசிசி தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சுட்டிக்காட்டிய ஸ்க்ஸ், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் விளையாடியதை தேவையற்ற தொடர் என்று விமர்சித்துள்ளார். அதனை பார்க்க யாரும் மைதானத்திற்கு வரவில்லை என்பதால், அந்த போட்டிகளில் விளையாடி என்ன பயன் என்று கூறினார்.

தரம் குறைந்துவிடும்

தரம் குறைந்துவிடும்

இப்போதெல்லாம் போட்டிகள் அதிகமாக நடைபெறுவதால் அனைத்து அணிகளும் டி20க்கு தனி அணி, டெஸ்ட்க்கு தனி அணி என்று அணியை தேர்வு செய்கிறார்கள் என்று குறிப்பிட்ட ஸ்டோக்ஸ், இது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட்டின் தரமும் குறைந்து விடும் என்று ஸ்டோக்ஸ் அறிவுறுத்தியுள்ளார். நாட்டிற்காக விளையாடும் போது, எதனையும் பார்க்க கூடாது என்று முன்னாள் வீரர்கள் கூறுவதையும் நிராகரித்த ஸ்டோக்ஸ், எந்த முக்கியத்துவமும் இல்லாத போட்டியில் ஏன் விளையாட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Story first published: Tuesday, December 27, 2022, 12:06 [IST]
Other articles published on Dec 27, 2022
English summary
England Test Skipper Slams ICC for conductiong more matches without planning
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X