For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் 10 நாளில் துவங்கும் டெஸ்ட் தொடர்... 6 நாள் குவாரன்டைன்... 3 நாள்தான் பயிற்சியாம்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 5ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது.

இதையொட்டி வரும் நாளை மறுதினம் இலங்கையில் இருந்து நேரிடையாக இங்கிலாந்து வீரர்கள் சென்னை வரவுள்ளனர். நேற்றைய தினம் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

 பொறுமை + சகிப்புத்தன்மை = புஜாரா... பிறந்தநாளில் தெறிக்கவிடப்பட்ட வாழ்த்துக்கள்! பொறுமை + சகிப்புத்தன்மை = புஜாரா... பிறந்தநாளில் தெறிக்கவிடப்பட்ட வாழ்த்துக்கள்!

இவர்கள் அனைவரும் 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்ள 3 நாட்கள் மட்டுமே நேரம் கிடைக்கும்.

சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி

சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி துவங்கி நடைறெவுள்ளது. இதையொட்டி இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து வீரர்கள் நாளை மறுதினம் சென்னை வரவுள்ளனர். நேற்றைய தினம் அந்த தொடரில் பங்கேற்காத பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.

3 முறை கொரோனா பரிசோதனை

3 முறை கொரோனா பரிசோதனை

இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் 6 நாட்களுக்கு சென்னையில் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. நாளை மறுதினம் சென்னை வரவுள்ள இங்கிலாந்து வீரர்கள் குவாரன்டைனை முடிக்கும் பட்சத்தில் 3 நாட்கள் மட்டுமே பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும்.

முதல் சர்வதேச போட்டி

முதல் சர்வதேச போட்டி

ஆனால் நேற்றைய தினம் சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி செய்ய கால அவகாசம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் சர்வதேச போட்டிகள் ஏறக்குறைய கடந்த ஒரு ஆண்டாக நடத்தப்படாத நிலையில் இந்த தொடர் நடத்தப்பட உள்ளது.

சுமூகமாக நடத்த பிசிசிஐ திட்டம்

சுமூகமாக நடத்த பிசிசிஐ திட்டம்

தொடர்ந்து ஐபிஎல் 2021 போட்டிகளும் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் இங்கிலாந்து -இந்தியா தொடரை சுமூகமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் கடுமையான குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் இறுதி 2 போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 25, 2021, 15:59 [IST]
Other articles published on Jan 25, 2021
English summary
A smooth conduct of the series is important for the BCCI, which is aiming to have the IPL also at home
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X