For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயிற்சிப் போட்டியில் 5 இந்திய வீரர்கள் அரைசதம்! ராகுல் மீண்டும் சொதப்பல்

Recommended Video

இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் பயிற்சி போட்டி: சிறப்பம்சங்கள்- வீடியோ

சிட்னி : இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் ஒரு பயிற்சிப் போட்டியில் ஆடியது.

இந்த பயிற்சிப் போட்டியில் இந்திய அணியின் ப்ரித்வி ஷா உட்பட ஐந்து இந்திய வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.

ஆனால், டி20 தொடரில் சொதப்பிய ராகுல் மீண்டும் ஒரு முறை சொற்ப ரன்களுக்கு வெளியேறி சொதப்பினார்.

வெளிவந்த உண்மை!! என்னை அவமானப்படுத்தினார்.. சிறை வைத்தார்.. மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்வெளிவந்த உண்மை!! என்னை அவமானப்படுத்தினார்.. சிறை வைத்தார்.. மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்

4 நாள் பயிற்சிப் போட்டி

4 நாள் பயிற்சிப் போட்டி

நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஒரே ஒரு நான்கு நாள் பயிற்சி போட்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா XI என்ற கத்துகுட்டி வீரர்கள் கொண்ட அணியோடு விளையாடுகிறது.

ராகுல் அதிர்ச்சி அளித்தார்

ராகுல் அதிர்ச்சி அளித்தார்

இதன் முதல் நாள் ஆட்டம் சிட்னியில் பெய்த பெரு மழையால் தடைபட்டது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ப்ரித்வி ஷா, ராகுல் துவக்கம் அளித்தனர். ராகுல் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

5 அரைசதங்கள்

5 அரைசதங்கள்

அடுத்து ப்ரித்வி ஷா 66, புஜாரா 54, கோலி 64, ரஹானே 56, ஹனுமா விஹாரி 53 என ஐந்து வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். ரோஹித் சர்மா 40 ரன்கள் அடித்து ஓரளவு ஆறுதல் அளித்தார். இந்தியா 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

ராகுல், ரிஷப் பண்ட் மோசம்

ராகுல், ரிஷப் பண்ட் மோசம்

இந்திய அணியில் இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என அனைவரும் அரைசதம் அடித்த நிலையில், ராகுல் மீண்டும் மோசமாக ஆடியுள்ளனர். இவர் கடைசியாக ஆடிய பத்து போட்டிகளை எடுத்து பார்த்தால், ஒன்று, இரண்டை தவிர, மற்றவற்றில் சுத்தமாக ரன் குவிக்கவில்லை.

ராகுல் சொதப்பல்கள்

ராகுல் சொதப்பல்கள்

ராகுல் கடைசியாக நன்றாக ஆடிய போட்டி எது என பார்த்தால் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த அரைசதமும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் அடித்த சதமும் தான். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர் என அனைத்திலும் ரன் எடுக்க முடியாமல் திணறினார் ராகுல்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் அரைசதம் அடித்தார். அதை தவிர எந்த போட்டியிலும் சரியாக ரன் குவிக்கவில்லை.

வாய்ப்பு அளிப்பது நியாயம் தானா?

வாய்ப்பு அளிப்பது நியாயம் தானா?

முக்கியமான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது நியாயம் தானா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. துவக்க வீரர் இடத்திற்கு முரளி விஜய் தற்போது தயாராக இருப்பதால், ராகுலுக்கு அணியில் இடமளிக்க கூடாது.

ஒரு போட்டி கொடுக்கலாம்

ஒரு போட்டி கொடுக்கலாம்

ரிஷப் பண்ட்டை பொறுத்தவரை அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற அடையாளத்தை பெற முயற்சித்து வருவதால் ஒரு போட்டி மட்டும் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். அதில் சொதப்பினால் நிச்சயம் அவரை அணியில் இருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும்.

காரணம் சொல்லி கடுப்பேத்தும் ஆஸ்திரேலியா.. இந்திய அணி பயிற்சிக்கு மொக்கை டீம் ஏன்?

Story first published: Friday, November 30, 2018, 15:39 [IST]
Other articles published on Nov 30, 2018
English summary
Except Rahul and Rishab Pant, five other batsmen hit fifties in warm up game against Cricket Australia XI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X