For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போலி ஐபிஎல் விவகாரம்.. ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றியது எப்படி? வேறு யாருக்கு தொடர்பு.. புது தகவல்

குஜராத்: குஜராத் மாநிலம் மோலிப்பூர் கிராமத்தில் போலியாக ஐபிஎல் போட்டியை நடத்தி, ரஷ்யாவிலிருந்து சூதாட்டம் பணத்தை பெற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Recommended Video

Fake IPL விவகாரம்! Russians-ஐ ஏமாற்றிய Gujarat Gang | Aanee's Appeal | *Cricket

கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சி அடைய செய்த இந்த சம்பவம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா

தினக்கூலிகளை அழைத்து நாள் ஒன்றுக்கு ரூபாய் 400 தருவதாக கூறி, சிஎஸ்கே, மும்பை, குஜராத் ஆகிய அணிகளின் ஜெர்சியை போட்டுள்ளனர்.

அதிநவீன தொழில்நுட்பம்

அதிநவீன தொழில்நுட்பம்

மேலும், நான்கு ஹெச் டி அதிநவீன தொழில்நுட்ப கேமிராவை வாடகைக்கு எடுத்து, கேமிரா மேன்களை வீரர்கள் விளையாடுவதை மட்டுமே எடுக்க சொல்லி இருக்கின்றனர். வெட்ட வெளியில் உள்ள நிலத்தை மைதானமாக்கி, அதற்கு ஆடுகளம் அமைத்து, செயற்கை மின்னனொளி விளக்கை வைத்து போட்டிகளை இந்த கும்பல் நடத்தியுள்ளது.

கிராபிக்ஸ் கார்டுகள்

கிராபிக்ஸ் கார்டுகள்

இந்த தொடருக்கு அவர்கள் வைத்த பெயர் இந்தியன் பிரிமீயர் கிரிக்கெட் லீக். இந்தப் போட்டியை ஐபிஎல் என்ற யூ டியூப் பக்கத்தை உருவாக்கி, அதனை நேரலையாக ஒளிபரப்பி இருக்கிறது இந்த கும்பல். மேலும், ஸ்கோர் கார்டுகளை நேரலையில் காட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பயன்படுத்திய கிராப்கிஸ் கார்டுகளை இந்த கும்பலும் பயன்படுத்தியுள்ளது.

ரஷ்ய தரகர்கள்

ரஷ்ய தரகர்கள்

மேலும், டெலிகிராம் பக்கத்தில் ரஷ்ய சூதாட்டக்காரர்களை தொடர்பு கொண்டு, அதன் முலம் இந்த கும்பல் சூதாட்டத்தை நடத்தியுள்ளது. மேலும், இந்த ஓவரில் எத்தனை ரன் செல்ல வேண்டும், எந்த பந்தில் அவுட்டாக வேண்டும். சிக்சர் அடிக்க வேண்டும், எப்போது நோ பால் வீச வேண்டும் போன்றவற்றை களத்தில் இருக்கும் நடுவரே சைகை காட்டுவாராம். அதை பார்த்து விரர்கள் செயல்படுவார்கள்.

4 பேர் கைது

4 பேர் கைது

ஹர்சா போக்லே போல் குரலை மாற்றி பேசும் நபர், இணையத்திலிருந்து பதவிறக்கம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் குரல் ஆகியவற்றையும் இந்த கும்பல் பயன்படுத்தியுள்ளது. சோயிப் தேவ்தா என்ற நபர் தான் இதற்கு தலைமை தாங்கியவர். இவர் ரஷ்யாவில் பணிபுரிந்த போது ஆசிஃப் என்ற நபருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் அளித்த ஐடியாவில் தான், தனது நண்பர்களுடன் இணைந்து போலி ஐபிஎல் போட்டியை நடத்தி 3 லட்சம் ரூபாய் வரை ஈட்டியுள்ளார்.

Story first published: Tuesday, July 12, 2022, 10:12 [IST]
Other articles published on Jul 12, 2022
English summary
Fake ipl tournament update – How this gang organised a mega tournament போலி ஐபிஎல் விவகாரம்.. ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றியது எப்படி? வேறு யாருக்கு தொடர்பு.. புது தகவல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X