கோஹ்லி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வேண்டும்... ரசிகர்களின் வைரல் கோரிக்கை

Posted By:
பாகிஸ்தான் பிரீமியர் போட்டிகளில் கோஹ்லியை அழைக்கும் ரசிகர்கள்- வீடியோ

சென்னை: கோஹ்லி பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் ரசிகர்கள் இந்த கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்களுக்கு கோஹ்லிக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அப்ரிடி என்ன ஆனாலும் கோஹ்லிதான் என் நண்பன் என்று புகழ்ந்து இருக்கிறார்.

அதேபோல் கோஹ்லி அனுஸ்கா திருமணத்திற்கு பல பாகிஸ்தான் வீரர்கள் வந்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது கோஹ்லியின் மீது புதிய பாச கணை வீசப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தானில் நடக்கும் சூப்பர் லீக் போட்டிகள் ஐபிஎல் போட்டி போலவே திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த முறை பெஷாவர், குவெட்டா, இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய அணிகள் விளையாடுகிறது. அடுத்த வருடம் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இல்லை

இல்லை

இந்த பிஎஸ்எல் தொடருக்கு பட்ஜெட் பெரிய அளவில் போடப்படவில்லை. அதேபோல் ஐபிஎல் போட்டி போலவும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை. துபாயில் நடப்பதால் பல இருக்கைகள் காலியாக இருந்தது.

கோஹ்லி

நேற்று இஸ்லமாபாத் யுனைடெட், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் வித்தியாசமான கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் கோஹ்லி எங்கள் அணியில் வந்து விளையாட வேண்டும். கோஹ்லி பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கொஞ்சமா கஷ்டம்தான்

இவர் ''பாஸ்கிதான் சூப்பர் லீக்கில் இகோஹ்லியை விளையாட வைக்க முடியாது. முதலில் ஸ்மித், வார்னர், மிட்சல், மேக்ஸ்வெல் ஆகியோரை அணியில் எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Friday, March 2, 2018, 16:09 [IST]
Other articles published on Mar 2, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற