For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ரணகளத்திலும் கிளுகிளுப்பு..?” ஓய்வு காலத்தில் விராட் கோலி செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆத்திரம்!

லண்டன்: இந்திய அணி வீரர் விராட் கோலியை திடீரென ரசிகர்கள் கடும் கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர்.

இங்கிலாந்துடனான 3 வடிவ கிரிக்கெட் தொடரையும் இந்திய அணி வெற்றிகரமாக முடித்தது.

இந்தியாவின் வெற்றி ஒருபுறம் இருந்த போதும், விராட் கோலியின் தொடர் சொதப்பல்கள் சர்ச்சையை கிளப்பியது.

அடேங்கப்பா.. பயிற்சி முகாமில் சிக்சர் பறக்கவிட்ட கோலி.. இன்னக்கி சம்பவம் இருக்கு! அடேங்கப்பா.. பயிற்சி முகாமில் சிக்சர் பறக்கவிட்ட கோலி.. இன்னக்கி சம்பவம் இருக்கு!

பேட்டிங் ஃபார்ம்

பேட்டிங் ஃபார்ம்

டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களுக்கு அவுட்டான விராட் கோலி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிமும் ஏமாற்றினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி வெறும் 76 ரன்களை மட்டுமே அவர் அடித்தார். அவரின் சராசரி 12.66 என மிகவும் மோசமாக இருந்தது.

திடீர் ஓய்வு

திடீர் ஓய்வு

இதனையடுத்து இந்திய அணியில் இனி விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வை பயன்படுத்தி அவர் கம்பேக் தருவார் என ரசிகர்கள் ஆதரவுக்குரல் கொடுத்து வந்தனர். ஆசியக்கோப்பை தொடரில் தன்னை நிரூபித்தால் மட்டுமே டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் என்ற நிலை உருவாகியுள்ளது.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

இந்நிலையில் அதே ரசிகர்கள் திடீரென கடுப்பாகி விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணம் தனது ஓய்வு நாட்களை பயிற்சிகாக பயன்படுத்தாமல், விளம்பரங்களில் கவனம் செலுத்தி வருவது தான். 'Wellman' என்ற மருந்து நிறுவனத்திற்கு கோலி விளம்பர தூதராக இருக்கிறார். இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு, மருத்தை வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

விமர்சிக்கும் ரசிகர்கள்

விமர்சிக்கும் ரசிகர்கள்

இதனை பார்த்த ரசிகர்கள், கிரிக்கெட்டை விட கோலிக்கு பணத்தின் மீது ஆசை அதிகமாக உள்ளது. இதற்கு அவர் திரைப்படங்களில் நடிக்க சென்றுவிட வேண்டியது தானே? எதற்காக ரசிகர்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறார் என மீம்கள் மூலம் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

விளம்பரங்கள் முக்கியம்

விளம்பரங்கள் முக்கியம்

இது ஒருபுறம் இருக்க, கோலியின் இந்த விளம்பரங்களால் தான் இந்திய அணியில் இருந்து அவரை நீக்க முடியாமல் பிசிசிஐ இருப்பதாக தகவல் வெளியானது. விராட் கோலி தற்போது வரை சுமார் 17 முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதராக இருப்பதாக தெரிகிறது. அவரை அணியில் இருந்து நீக்கினால், முதலீட்டாளர்களின் ஆர்வம் குறையும் என்பதால், பிசிசிஐ தொடர்ந்து வாய்ப்பு தருவதாக குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 19, 2022, 19:18 [IST]
Other articles published on Jul 19, 2022
English summary
Virat kohli gets trolled ( விராட் கோலியை விமர்சிக்கும் ரசிகர்கள் ) ஓய்வு நேரத்தில் விராட் கோலி செய்த விஷயத்தை பார்த்து ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X