For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் கூட ஆகல அதுக்குள்ள இப்படியா? எம்பாப்பே-க்கு எதிராக திடீர் கண்டன குரல்.. காரணம் என்ன??

கத்தார்: உலகமே கொண்டாடி வரும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே-வை திடீரென ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெனால்டி ஷுட் அவுட் முறையில் அர்ஜெண்டினா 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதனையடுத்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கனவு நிறைவேறியுள்ளது.

2 நிமிடத்தில் 2 கோல்கள்.. இவர் மனிதனா?? ஏலியனா?? அடுத்த GOAT ஆக எம்பாப்பே போற்றப்படுவது ஏன்?? 2 நிமிடத்தில் 2 கோல்கள்.. இவர் மனிதனா?? ஏலியனா?? அடுத்த GOAT ஆக எம்பாப்பே போற்றப்படுவது ஏன்??

புதிய கோட்

புதிய கோட்

ஆனால் லியோனல் மெஸ்ஸியை கொண்டாடும் அதே அளவிற்கு பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவையும் கொண்டாடி வருகின்றனர். ரொனால்டோ, மெஸ்ஸிக்கு பிறகு GOAT என்றால் அது எம்பாப்பே தான் என்ற அளவிற்கு உருவெடுத்துள்ளார். ஏனென்றால் இறுதிப்போட்டியில் 3 - 0 என பிரான்ஸ் திணறிய போது அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல்களை அடித்து பெனால்டி ஷூட் அவுட் வரை கொண்டு சென்றது அவர் தான்.

திடீர் கொந்தளிப்பு

திடீர் கொந்தளிப்பு

இந்நிலையில் பிரேசில், அர்ஜெண்டினா அணிகளின் ரசிகர்கள் திடீரென எம்பாப்பேவுக்கு எதிராக விமர்சனங்களை குவிக்க தொடங்கியுள்ளனர். 6 மாதங்களுக்கு முன்னால் அவர் கூறிய கருத்து தான் தற்போது விணையாக வந்துள்ளது. அதாவது பிரேசில் அர்ஜெண்டினா அணிகளுக்கெல்லாம் தரமான கால்பந்தே விளையாட தெரியவில்லை என்பது போல கூறியிருந்தார்.

எம்பாப்பே சர்ச்சை கருத்து

எம்பாப்பே சர்ச்சை கருத்து

கடந்த மே மாதம் பேசிய அவர், தென் அமெரிக்காவை விட ஐரோப்ப நாடுகளில் கால்பந்து தரமாக உள்ளது. குறிப்பாக பிரேசில், அர்ஜெண்டினா அணிகளெல்லாம் ஐரோப்பா அளவிற்கு கிடையாது. அவர்கள் சரியான கால்பந்தையே விளையாடவில்லை. எங்களின் மேம்பட்ட ஆட்டம் காரணமாக தான் எப்போதுமே நாக் அவுட் சுற்றுக்கு செல்கிறோம் என மட்டம் தட்டி பேசியிருந்தார்.

ரசிகர்கள் விளாசல்

ரசிகர்கள் விளாசல்

அவரின் இந்த பதிவை தற்போது கிளறியுள்ள ஐரோப்பா கால்பந்து ரசிகர்கள், நீங்கள் தரமற்றது எனக்கூறிய அர்ஜெண்டினா தான் இன்று உங்களை வீழ்த்தியுள்ளது. இப்போதாவது எந்த ஒரு நாட்டையும் குறைக்கூறாமல் திறமையை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கோல் கீப்பரின் பதிலடி

கோல் கீப்பரின் பதிலடி

இதனிடையே நேற்று இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே அர்ஜெண்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் பதிலடி கொடுத்தார். அதில், எம்பாப்பே-க்கு கால்பந்து குறித்து பெரிதாக எதுவும் தெரியவில்லை; தென் அமெரிக்காவில் விளையாடிய அனுபவம் இல்லை என்றால், அமைதியாக இருந்துவிடுவது நல்லது என பதில் கொடுத்தார்.

Story first published: Monday, December 19, 2022, 19:24 [IST]
Other articles published on Dec 19, 2022
English summary
Kylian Mbappe’s statement about South America creates controversy after the fifa world cup final 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X