டேவிட் வார்னரின் மனைவி குறித்து தவறாக பேசிய குயிண்டன் டி காக்.. சிசிடிவியில் பதிவான மோசமான சண்டை

Posted By:
வார்னர் மனைவியை தவறாக பேசிய டி காக் -வீடியோ

டர்பன்: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்கும் சண்டை போடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் கிரிக்கெட் நடந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் டர்பனில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இந்த போட்டியில்தான் இந்த பிரச்சனை உருவாகி இருக்கிறது. இருவருக்கும் இடையில் ஏற்கனவே சண்டை நடைபெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கம்

தொடக்கம்

இந்த சண்டை ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட் மூலம் தொடங்கி இருக்கிறது. அவர் எதிரே இருந்த சக வீரருடன் மோதிய காரணத்தால் ரன் அவுட் ஆனார். இதை ஆஸ்திரேலிய வீரர்கள் சிரித்துக் கொண்டே கொண்டாடினார்கள். சிலர் ஏபிடியை கிண்டல் கூட செய்தார்கள்.

 சண்டை ஆனது

சண்டை ஆனது

இதனால் இருநாட்டு வீரர்களுக்கு கோபமாக இருந்தார்கள். இது சாப்பாடு இடைவெளியில் எதிரொலித்தது. டிரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பி செல்லும் போது வார்னருக்கும் குயிண்டன் டி காக்கும் இடையில் சண்டை வந்து இருக்கிறது. எல்லா வீரர்களும் அங்கு இருந்துள்ளார்கள்.

 மனைவி குறித்து திட்டினார்

மனைவி குறித்து திட்டினார்

இந்த சண்டை கொஞ்ச நேரத்தில் பெரிதாகி இருக்கிறது. இந்த நிலையில் வார்னரின் மனைவி குறித்து குயிண்டன் டி காக் திட்டி இருக்கிறார். இது பெரிய பிரச்சனை ஆகும் முன் அங்கு மற்ற வீரர்கள் வந்து சமாதானம் பேசி அனுப்பி இருக்கிறார்கள்.

 வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இந்த வீடியோ வெளியாகி மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய நிர்வாகமும், தென்னாப்பிரிக்க அணி நிர்வாகமும் கூறியுள்ளது. இது இரு நாட்டு ரசிகர்களையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது.

Story first published: Monday, March 5, 2018, 14:00 [IST]
Other articles published on Mar 5, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற