இப்போதும் எப்போதும் என்னுடைய வாலன்டைன்... விராட் கோலிக்காக காதலர் தின பதிவிட்ட அனுஷ்கா!

மும்பை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேப்டன் விராட் கோலி சென்னையில் உள்ளார்.

இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி விராட் கோலி மற்றும் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா.

இப்போதும் எப்போதும் தன்னுடைய வாலன்டைன் கோலி என்ற கேப்ஷனையும் அந்த புகைப்படத்தில் அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடருக்காக சென்னையில் உள்ளார் இந்திய கேப்டன்விராட் கோலி. இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் மகளை பிரிந்து அவர் சென்னையில் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று காதலர் தினத்தையொட்டி அவரது மனைவி அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலிக்காக காதலர் தின பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சூரிய அஸ்தமனத்தின் பின்புலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இப்போதும் எப்போதும் தன்னுடைய வாலன்டைன் விராட் கோலி என்று கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
My valentine every day forever and beyond -Anushka sharma
Story first published: Sunday, February 14, 2021, 18:04 [IST]
Other articles published on Feb 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X