For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

11 பேரை கரெக்டா செலக்ட் பண்ண தெரியல..? நீங்க எல்லாம் ஒரு கேப்டன்..? கோலியை வாரி விடும் ஜாம்பவான்

மும்பை: அஸ்வின், குல்தீப் ஆகியோரை ஒதுக்கி வைத்துள்ள கோலி, பாரபட்சமின்றி 11 பேரை தேர்வு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கங்குலி சர்ச்சை கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. தொடரில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் அனுபவ பவுலர் அஸ்வின் சேர்க்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க வில்லை. இது பெரும் சர்ச்சைகளையும், கடுமையான கேள்விகளையும் எழுப்பியது.

எதிர்ப்பு கருத்து

எதிர்ப்பு கருத்து

சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரத்தில் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமாகிய சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்தார். அவரை தொடர்ந்து இப்போது மற்றொரு ஜாம்பவான் கங்குலியும், கோலிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

வாய்ப்பு

வாய்ப்பு

அவர் கூறியிருப்பதாவது: அணி தேர்வில் கோலி அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

புரிந்து கொள்ள வேண்டும்

புரிந்து கொள்ள வேண்டும்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ஸ்ரேயாஸ் அய்யர். அதேபோல மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும். கோலி இதனை விரைவில் புரிந்து கொண்டு நடப்பார்.

ரொம்ப ஆச்சர்யம்

ரொம்ப ஆச்சர்யம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விவகாரம் எனக்கு ரொம்ப ஆச்சரியத்தை தருகிறது.

சிறப்பான பவுலிங்

சிறப்பான பவுலிங்

ஏனென்றால் கடைசியாக குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த சிட்னி மைதானத்தில் இந்த 5 விக்கெட்களை அவர் சாய்த்திருக்கிறார்.

கடும் போட்டி

கடும் போட்டி

இப்போது, அணியில் இடம் இல்லாமல் வெளியில் உட்கார்ந்திருக்கிறார். அணியில் ஜடேஜா சேர்க்கப் பட்டுள்ளார். அவரும் நன்றாக தான் விளையாடி வருகிறார். ஆகவே இந்திய அணியில் வீரர்களின் இடத்திற்கு அதிக போட்டி நிலவுகிறது. அது மிக நல்ல விஷயம்தான் என்றார்.

Story first published: Sunday, August 25, 2019, 10:00 [IST]
Other articles published on Aug 25, 2019
English summary
Former captain Ganguly advices to skipper kohli, about team selection.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X