For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு ஆப்பு வைக்க ஐடியா கொடுத்த முன்னாள் கேப்டன்..! இவரு தான் 4ம் இடத்துக்கு பொருத்தமானவர்

Recommended Video

ஸ்ரேயாஸ் அய்யர் தான் 4-ம் இடத்துக்கு பொருத்தமானவர்- கவாஸ்கர்

போர்ட் ஆப் ஸ்பெயின்: 4ம் நிலை வீரருக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தான் சரியானவர் என்று தோனிக்கு செக் வைக்கும் வகையில் பாராட்டி கருத்தை தெரிவித்து இருக்கிறார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேற்றைய 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியது இந்தியா. 2 வது விக்கெட்டாக 16வது ஓவரில் ரோகித் வெளியேறினார். பின்னர் 4ம் வரிசையில் இறங்கிய ரிஷப் பன்ட் சோபிக்க வில்லை. 34 பந்துகளில் வெறும் 20 ரன்கள் அடித்து ஏமாற்றினார்.

ரிஷப்பின் விக்கெட்டுக்கு பிறகு 5வது வீரராக வந்தவர் ஷ்ரேயாஸ் ஐயர். மிடில் ஆர்டர் வீரர் முக்கியத்துவத்தை உணர்ந்து, பார்ட்னர்ஷிப் அமைக்கும் பணியை அழகாக செய்தார்.

125 ரன்கள் ஜோடி

125 ரன்கள் ஜோடி

கவனமாகவும், பந்துகளை நேர்த்தியா தேர்ந்தெடுத்தும் ஆடினார். அய்யர், கோலி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 125 ரன்களை குவித்தனர். அதில் ஸ்ரேயாஸ் அய்யர் 3வது முறையாக அரைசதம் அடித்தார்.

நிர்வாகம் நம்பிக்கை

நிர்வாகம் நம்பிக்கை

ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனின் கடமை என்ன என்பதை உணர்த்தினார் ஸ்ரேயாஸ் அய்யர். அவரின் மீது நிர்வாகமும் இனி நம்பிக்கை வைக்கும் என்று கூறலாம். தான் சேர்க்கப்பட்டது உரிய நியாயத்தையும் அந்த போட்டி மூலம் உறுதிப்படுத்தி விட்டார் ஷ்ரேயாஸ் அய்யர்.

பாராட்டு மழை

பாராட்டு மழை

இந்நிலையில், ஷ்ரேயாசை பாராட்டி தள்ளி இருக்கிறார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். அவர் கூறியிருப்பதாவது: ஷ்ரேயாஸ் அய்யர் அவருக்கான வாய்ப்பை பெற்று விட்டார் (அதாவது இனி அவர் 4ம் இடத்துக்கு பொருத்தமானவர். தோனி அவசியமில்லை என்று கூறுகிறார்).

கற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொள்ள வேண்டும்

5ம் வரிசையில் அவர் இறங்கியபோது ஆட நிறைய ஓவர்கள் இருந்தன. கோலிக்கு ஈடு கொடுத்து ஆடினார். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களிடமிருந்து தான் கிரிக்கெட்டை கற்றுக் கொள்ள வேண்டும்.

இவர் தான் 4வது வீரர்

இவர் தான் 4வது வீரர்

அதற்கு பவுலிங் முனைதான் சரியானது. அதை சரியாக பயன்படுத்தினார் ஷ்ரேயாஸ் அய்யர். டாப் ஆர்டரில் 35 ஓவர்கள் வரை பேட்ஸ்மென்கள் இருக்கும் பட்சத்தில், பன்ட்டுக்கு முன்பாக ஸ்ரேயாஸ் அய்யர் தான் பொருத்தமானவர். அவரை இனி 4வது வீரரா க வருவதே சரியாக இருக்கும் என்றார்.

Story first published: Monday, August 12, 2019, 15:35 [IST]
Other articles published on Aug 12, 2019
English summary
Former captain of india sunil gavaskar praises shreyas iyer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X