For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறைந்தார் ஆஷஸ் ஹீரோ பாப் வில்லீஸ்.. கண்ணீரில் இங்கிலாந்து ரசிகர்கள்

லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனும் சிறந்த வேகப்பந்து வீச்சாளருமான பாப் வில்லீஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.

இங்கிலாந்து அணியில் 13 வருடங்கள் விளையாடியுள்ள பாப் வில்லீஸ், 90 டெஸ்ட் போட்டிகளிலும் 64 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 325 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள பாப் வில்லீஸ், மிகச்சிறந்த கணவராக, தந்தையாக, சகோதரராக மற்றும் தாத்தாவாக இருந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 பாப் வில்லீஸ் மரணம்

பாப் வில்லீஸ் மரணம்

இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லீஸ் லண்டனில் உடல்நலக் குறைவால் தன்னுடைய 70வது வயதில் காலமானார். அவருக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 13 வருட விளையாட்டு

13 வருட விளையாட்டு

பாப் வில்லீஸ் இங்கிலாந்து அணிக்காக 13 வருடங்கள் விளையாடியுள்ளார். சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த வில்லீஸ், 90டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 325 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 1984ல் இறுதி சர்வதேச போட்டி

1984ல் இறுதி சர்வதேச போட்டி

இங்கிலாந்து அணிக்காக வில்லீஸ் 18 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். மேலும் கடந்த 1984ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வில்லீஸ், அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான தனது இறுதிப்போட்டியை விளையாடினார்.

 சிறந்த கிரிக்கெட் நிபுணர்

சிறந்த கிரிக்கெட் நிபுணர்

64 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள பாப் வில்லீஸ், சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக ஸ்கை ஸ்போர்ட்ஸ் மற்றும் பிபிசி போன்ற நிறுவனங்களுக்காக பணிபுரிந்துள்ளார்.

"கிரிக்கெட் உற்ற நண்பனை இழந்துவிட்டது"

பாப் வில்லீசின் மறைவிற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அஞ்சலி தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டிற்காக வில்லீஸ் செய்துள்ள பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அது, கிரிக்கெட் தனது உற்ற தோழனை இழந்து விட்டதாக கூறியுள்ளது.

 ஆஷஸ் ஹீரோ

ஆஷஸ் ஹீரோ

கடந்த 1981ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற போட்டியில் 43 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய அணி வெற்றி பெற காரணமாக இருந்தவர் பாப் வில்லீஸ். இதன்மூலம் இவர் ஆஷஸ் ஹீரோ என்று அழைக்கப்படுகிறார்.

 குடும்பத்தினர் புகழாரம்

குடும்பத்தினர் புகழாரம்

பாப் வில்லீசின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவரது குடும்பத்தினர், அவர் சிறந்த கணவராக, தந்தையாக, சகோதரனாக, தாத்தாவாக விளங்கியதாக புகழாரம் சூட்டியுள்ளனர். அவர் தான் பழகியவர்கள் அனைவரிடமும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Thursday, December 5, 2019, 13:52 [IST]
Other articles published on Dec 5, 2019
English summary
Ashes Hero Bob Willis died in his age of 70
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X