For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து அவருக்கு மட்டும் முக்கிய பிரச்னை.. பார்த்து ஆடலனா எல்லாம் முடிஞ்சது..பரத்வாஜ் எச்சரிக்கை

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டும் அதிக அழுத்தமும், பிரச்னையும் உள்ளதாக முன்னாள் வீரர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் வரும் ஜூன்18ல் நடக்கிறது.

 அதிக சம்பளம் பெறும் நம்பர்.1 கேப்டன்.. கோலி இல்ல - இவருக்கா இவ்ளோ சம்பளம்? அதிக சம்பளம் பெறும் நம்பர்.1 கேப்டன்.. கோலி இல்ல - இவருக்கா இவ்ளோ சம்பளம்?

இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள பயோ பபுளில் 14 நாட்கள் குவாரண்டை உள்ளனர். அவர்கள் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து செல்கின்றனர்.

 இங்கிலாந்து பிட்ச்

இங்கிலாந்து பிட்ச்

இங்கிலாந்து பிட்ச்-ஆனது வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான ஒன்று. எனவே இங்கு பொறுமை அவசியம். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் அங்கு எப்படி விளையாட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அணியில், சுப்மன் கில், மயங்க் அகர்வால், வாசிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்டோர் முதல் முறையாக இங்கிலாந்து செல்கின்றனர்.

அஜிங்கியா ரஹானே

அஜிங்கியா ரஹானே

இந்திய அணியின் பேட்டிங் தூண்களாக பார்க்கப்படும் விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகியோர் தங்களது 3வது டெஸ்ட் தொடரை அங்கு விளையாடுகிறார்கள். இதில் ரஹானே மீதான சந்தேகம் தான் அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 552 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 4 அரைசதமும் அடங்கும். எனினும் ரஹானே இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

மிகுந்த அழுத்தம்

மிகுந்த அழுத்தம்

இங்கிலாந்தில் ரஹானே மிகுந்த அழுத்தம் உள்ளது. ஏனென்றால் சமீப காலமாக அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவ்வளவாக பூர்த்தி செய்யவில்லை. தனது பேட்டிங்கில் நிலையான ஃபார்மில் அவர் இல்லை. எனவே அவர் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதிரடி வேண்டும்

அதிரடி வேண்டும்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரஹானே சற்று வேகமாக ரன் உயர்த்த வேண்டும். ஏனென்றால் மறுமுணையில் பார்ட்னர்ஷிப் கொடுக்க புஜாரா உள்ளார். எனவே மற்றொரு வீரரும் பொறுமையாக ஆடக்கூடாது. இந்த போட்டி சமனில் முடிவடைந்தால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். எனவே வெற்றி பெற பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன் உயர்த்த வேண்டும். கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோர் அதற்கு சரியான ஃபார்மில் உள்ளனர். ஆனால் ரஹானேவும் நம்பிக்கையுடன் அதிரடி காட்ட வேண்டும்.

Story first published: Sunday, May 30, 2021, 18:03 [IST]
Other articles published on May 30, 2021
English summary
Former Indian star thinks one India batsman will be 'under a lot pressure' in England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X