For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹேப்பி ரிடையர்மென்ட் ஜாகீர்... ஓய்வு பெற்ற ஜாகீர் கானுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் புகழாரம்

பெங்களூரு: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்து ஒய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் டிவிட்டரில் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

37 வயதான ஜாகீர் கான் இந்தியாவின் தலைசிறந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த 2000 ஆண்டிலிருந்து விளையாடி வருகின்ற அவர், கிட்டதட்ட 600க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளதால் வருகின்ற 2016 ஆம் ஆண்டின் பிரீமியர் லீக் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவார். 92 டெஸ்ட் போட்டிகளிலும், 200 ஒருநாள் போட்டிகளிலும், 17 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கிங் ஆப் கிரிக்கெட்:

கிங் ஆப் கிரிக்கெட்:

டெஸ்ட் போட்டிகளில் கிட்டதட்ட 311 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், டி20யில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டெய்ன் ஜாகீரை "கிங்" என்று வர்ணித்துள்ளார்.

ரசிக்க வைத்த பந்துவீச்சு:

ரசிக்க வைத்த பந்துவீச்சு:

ரோஹித் சர்மா வெளியிட்டுள்ள டிவிட்டில், "உங்களுடைய ஒவ்வொரு பந்து வீச்சையும் நான் ரசித்திருக்கின்றேன். எல்லாவற்றையும் தாண்டி ஒரு நல்ல தோழன் எனக்கு நீங்கள். ஹேப்பி ரிடையர்மெண்ட் ஜாகீர்" என்று தெரிவித்துள்ளார்.

ஒத்துழைப்புக்கு நன்றி:

இந்திய கிரிக்கெட் வாரியமும் ஜாகீருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ, "உங்களுடைய அனைத்து திறமையான ஒத்துழைப்பிற்கும் நன்றி" என்று தனது டிவிட்டில் தெரிவித்துள்ளது.

வாழ்த்துக்கள் ஜாகீர்:

இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில்,, "ஒரு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர். உங்களுடைய எதிர்கால திட்டங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்களை உருவாக்க வேண்டும்:

இளம் வீரர்களை உருவாக்க வேண்டும்:

விவிஎஸ் லக்‌ஷ்மன், "உங்களுடைய அருமையான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் இணைந்து பணியாற்றியது பெரும் மகிழ்ச்சி. இந்திய கிரிக்கெட் உலகில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க உங்களுடைய பணி தொடர வேண்டும் ஜாகீர்" என்று தெரிவித்துள்ளார்.

எதிர்காலம் சிறக்கட்டும்:

எதிர்காலம் சிறக்கட்டும்:

அனில் கும்ப்ளே, "சிறந்த அனுபவம் உங்களுடன் விளையாடியது. எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மனதுக்கு பிடித்த கிங்:

மனதுக்கு பிடித்த கிங்:

டேல் ஸ்டெய்ன், " நீங்கள் ஒரு கிங் ஜாக். எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தவர் நீங்கள். சிறந்த எதிர்காலத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, October 16, 2015, 11:18 [IST]
Other articles published on Oct 16, 2015
English summary
atting legend Sachin Tendulkar, India's Test captain Virat Kohli, limited overs skipper MS Dhoni and several other current and former cricketers today joined to pay rich tributes to Zaheer Khan, who retired from international cricket on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X