For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முன்னாள் வீரர்கள் இதை செய்தார்களா? எல்லாருக்கும் விக்கெட் ஒன்றுதான்..யுவ்ராஜுக்கு கம்பீர் பதிலடி

அகமதாபாத்: அஸ்வின் சாதனை குறித்து மறைமுகமாக விமர்சித்த யுவ்ராஜ் சிங்கிற்கு கம்பீர் அளித்துள்ள பதில் ரசிகர்களுக்கு ஆதரவு தந்துள்ளது.

நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட்டில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 400 விக்கெட்களை எடுத்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்தார்.

சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு! சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு!

இதனை யுவ்ராஜ் சிங் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் யுவ்ராஜ் சிங்கின் கருத்துக்கு முன்னாள் வீரர் கம்பீர் அன்றைய வீரர்கள் அகமதாபாத் போன்ற பிட்ச்-ல் ஆடியதில்லை என பதிலளித்துள்ளார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் உலகில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 77 போட்டிகளில் அஸ்வின் ஆடி 2ம் இடம் பிடித்தார். ஆனால் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாய் இருந்ததாக குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது.

 மறைமுக விமர்சனம்

மறைமுக விமர்சனம்

இது குறித்து ட்வீட் செய்திருந்த முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், போட்டி 2 நாட்களில் முடிந்துவிட்டது. இது கிரிக்கெட்டிற்கு நல்லதா என தெரியவில்லை. இதுபோன்ற ஆடுகளத்தில் ஆடியிருந்தால் ஹர்பஜன் சிங், அனில் கும்ளே ஆகியோர் 1000, 800 விக்கெட்களை எடுத்திருப்பார்கள் என அஸ்வினை மறைமுகமாக விமர்சித்தார்.

கம்பீர் பதில்

கம்பீர் பதில்

யுவ்ராஜ் சிங்கின் கருத்துக்கு பதில் அளித்த கம்பீர், ஆம் இன்று விக்கெட்கள் வித்தியாசமாகதான் உள்ளது. ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் டி.ஆர்.எஸ் முறை இல்லை. இந்தியா போன்ற களத்தில் அதிகமாக இன்சைட் எட்ஜுகள், பேட்டில் உரசுவது போன்றவை அதிகமாக இருக்கும். அன்றைய காலத்தில் டி.ஆர்.எஸ் இருந்திருந்தால் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் நிச்சயம் 1000, 700 விக்கெட்கள் எடுத்திருக்கலாம்.

கம்பீர் ஆதரவு

கம்பீர் ஆதரவு

யுவ்ராஜுன் கருத்து ஒப்புக்கொள்ள கூடிய ஒன்றுதான். ஆனால் அன்றைய வீரர்கள் இன்று பயன்படுத்தப்படும் பிட்ச்களில் ஆடியதில்லை. அன்று பிட்ச்களே வேறு. அனைவருக்கும் விக்கெட்கள் எடுப்பது ஒன்றே. அஸ்வின் ஒன்றும் தனக்கு இப்படிப்பட்ட பிட்ச் வேண்டும் என்று கேட்கவில்லை. அணி நிர்வாகம் தான் கேட்கிறது. இது போன்ற களத்தில் விக்கெட் எடுக்கதான் அஸ்வின் பயிற்சி மேற்கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 2, 2021, 12:47 [IST]
Other articles published on Mar 2, 2021
English summary
Gambhir Replies on Yuvraj's Critic tweet about wicket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X