டோணி மட்டும் முன்பே வந்திருந்தா… கங்குலி உருக்கம்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
டோனியை நினைத்து கங்குலி உருக்கம்- வீடியோ

டெல்லி: 2003ல் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது, டோணி இருந்திருந்தா, அந்த உலகக் கோப்பையை வென்றிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஏ சென்சுரி இஸ் நாட் எனாப் என்று தனது சுயசரியை எழுதியுள்ளார் வங்கப் புலி சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகக் கருதப்படும் கங்குலி, அதில், கேப்டன் கூல் டோணி குறித்து விரிவாக கூறியுள்ளார்.

நான் பல வீரர்களைப் பார்த்துள்ளேன். ஆனால், முதல் நாளில் இருந்து இப்போது வரை என்னை அசத்தி வருவது டோணிதான்.

அப்ப மட்டும் டோணி இருந்திருந்தால்

அப்ப மட்டும் டோணி இருந்திருந்தால்

2003ல் நடந்த உலகக் கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தோம். அந்த நேரத்தில் டோணி மட்டும் இந்திய அணியில் இருந்திருந்தால், கோப்பை நமக்கு கிடைத்திருக்கும் என்று நான் எப்போதும் நினைத்துக் கொள்வேன்.

டோணியிடம் கற்றுக் கொள்ளுங்கள்

டோணியிடம் கற்றுக் கொள்ளுங்கள்

மிகவும் இக்கட்டான காலத்தில் மைதானத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இளம் வீரர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் 2004ல் அறிமுகமான டோணி, முதல் நாளில் இருந்தே என்னை அசத்தினார். அவர் குறித்த என்னுடைய கணிப்பு சரி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் டிடிடி ஆக இருந்தார்

அவர் டிடிடி ஆக இருந்தார்

2003 உலகக் கோப்பைப் போட்டியின்போது, டோணி, ரயில்வேயின் டி.டி.இ.,யாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு தனது சுயசரிதையில், டோணி குறித்து பல கருத்துக்களை கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

கங்குலியைப் பாராட்டிய டோணி

கங்குலியைப் பாராட்டிய டோணி

எம்.எஸ் டோணி - த அன்டோல்டு ஸ்டோரி என்ற டோணியின் சுயசரிதையிலும், கங்குலி குறித்து டோணி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். கங்குலி கேப்டனாக இருந்தபோது, 2004ல் வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமானவர் டோணி. 2007ல் டி-20 உலகக் கோப்பை, 2011ல் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என்று மூன்று முக்கிய கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் டோணிதான்.

Story first published: Friday, March 2, 2018, 11:29 [IST]
Other articles published on Mar 2, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற