கெளதம் கம்பீருக்கு விரைவில் கல்யாணம்!

டெல்லியைச் சேர்ந்தவர் கம்பீர். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருக்கிறார். சமீப காலமாக காயம் காரணமாக அவர் சரிவர விளையாட முடியாமல் இருக்கிறார். இந்த நிலையில், அவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
மணப்பெண் நதாஷா ஜெயின். இவரும் டெல்லியைச் சேர்ந்தவர்தான். நவம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.
மணமக்களின் திருமண உடைகளை டெல்லியைச் சேர்ந்த சாந்தனு, நிகில் ஆகிய இரு டிசைனர்களும் வடிவமைக்கவுள்ளனராம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:50 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications