தேசிய கீதத்துக்கு எழுந்து நிக்கிறது அவ்வளவு கஷ்டமா...பொங்கிய கம்பீர்...கலாய்க்கும் ரசிகர்கள்

Posted By:

டெல்லி: கடந்த சில மாதங்களுக்கு முன் தியேட்டர்களில் திரைப்படம் ஒளிபரப்பாவதற்கு முன்பு கண்டிப்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. தற்போது சில நாட்களுக்கு முன் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது கண்டிப்பாக எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.

மேலும் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பது எப்போதும் ஒருவருடைய தேச பற்றை நிரூபிக்காது என்றும் கூறியிருந்தனர். இதையடுத்து இது குறித்து டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கவுதம் கம்பீர். அதில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க முடியாதா என்பது போல கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதையடுத்து அவரின் அந்த டிவிட்டுக்கு ஆதரவாக சில பேரும், அவரது டிவிட்டுக்கு எதிராக சில பேரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றார்.

 தியேட்டரில் தேசிய கீதம்

தியேட்டரில் தேசிய கீதம்

கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதி மன்றத்தில் நடத்த ஒரு வழக்கில் , இனி தியேட்டர்களில் திரைப்படம் ஒளிபரப்பாவதற்கு முன்பு கண்டிப்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இதும் பெரிதும் விவாதமானது. பலரும் இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது கண்டிப்பாக எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்தது உச்சநீதிமன்றம். மேலும் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பது எப்போதும் ஒருவருடைய தேச பற்றை நிரூபிக்காது என்றும் கூறியிருந்தனர்.

டிவிட்டரில் கவுதம் கம்பீர் கருத்து

இதையடுத்து இந்த விஷயம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார் கவுதம் கம்பிர். அதில் ''கிளப்புகளில் 20 நிமிடமும், உணவு விடுதிகளில் 30 நிமிடமும் பொறுமையாக லைனில் நிற்கும் பொதுமக்களால் தேசிய கீதத்துக்கு எழுந்து நிறுக்க முடியாதா. ஒரு 52 நொடிகள் எழுந்து நிற்பதில் என்ன இருக்கிறது. அவ்வளவு கஷ்டமா அது'' என மிகவும் கோவமாக கேட்டு இருக்கிறார்.

கவுதமை கலாய்த்த மக்கள்

இந்த நிலையில் கவுதமின் டிவிட்டுக்கு பலர் எதிரிப்பு தெரிவிக்க தொடங்கினர். அவரது டிவிட்டை வைத்து நாள் முழுக்க கலாய்த்துக் கொண்டு இருந்தனர். அது எப்படி தேசிய கீதத்திற்கு நிற்பதும், கிளப்பில் லைனில் நிற்பதும் ஒன்றாகும் என்று கேட்டு இருந்தனர்.மேலும் "கடைகளிலும், ஹோட்டல்களிலும் லைனில் நிற்பது என்னுடைய விருப்பம், அதேபோல் தேசிய கீதத்திற்கு நிற்பதும் என்னுடைய விருப்பம் என்று விட்டுவிடலாம் தானே" என இந்த டிவிட்டில் கேட்டு இருக்கிறார் ஒருவர்.

கவுதம் கம்பிருக்கு மக்கள் ஆதரவு

கவுதம் கம்பிர் எழுதிய டிவிட்டுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து இருந்தாலும் வேறு சிலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அவர் பேசுவது சரிதானே அதில் என்ன தவறு இருக்கிறது என்பது போல கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவரது ரசிகர் ஒருவர் ''உங்கள் மீது இருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் ஒரு பொறுப்பான நபர் என்பதை நிருபிக்கிறீர்கள்" என்று கூறியிருக்கிறார்.

Story first published: Sunday, October 29, 2017, 11:45 [IST]
Other articles published on Oct 29, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற