For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தில் கபில் தேவ் 25 கோடிக்கு விலை போவார்.. சொன்னது யார் தெரியுமா?

மும்பை : கபில் தேவ் மற்றும் கவாஸ்கர் ஐபிஎல் ஏலம் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆஜ் தக் ஹிந்தி தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் கவாஸ்கர், கபில் தேவை புகழ்ந்து தள்ளினார்.

ஐபிஎல் அணிகள் கபில் தேவ்-ஐ 25 கோடிக்கு வாங்குவார்கள் எனக் கூறி தெறிக்க விட்டார் கவாஸ்கர்.

கபில் தேவ்-ஐ புகழும் கவாஸ்கர்

கபில் தேவ்-ஐ புகழும் கவாஸ்கர்

கபில் தேவ் - கவாஸ்கர் இடையே பிளவு இருந்தது என முன்பு கூறப்பட்டது. ஆனால், சமீப காலங்களில் இருவரும் சுமூகமாகவே இருந்து வருகிறார்கள். அதிலும் கவாஸ்கர் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கபில் தேவ் பற்றி புகழ்ந்து பேசி வருகிறார்.

உலகக்கோப்பையில் 175 ரன்கள்

உலகக்கோப்பையில் 175 ரன்கள்

இங்கிலாந்தில் நடைபெற்ற 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில் தேவ் அடித்த 175 ரன்கள் தான் ஒருநாள் போட்டி வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்டம் என கூறினார் கவாஸ்கர். அந்த போட்டியில் கிடைத்த வெற்றி தான் உலகக்கோப்பையில் இந்தியா பெற்ற முதல் வெற்றி ஆகும்.

அணியை மீட்டார் கபில் தேவ்

அணியை மீட்டார் கபில் தேவ்

அதற்கு காரணமாக, இந்தியா அப்போது 17 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து இருந்ததை குறிப்பிட்டார். அந்த மோசமான நிலையில் இருந்து கபில் தேவ் அணியை மீட்டார். அதிலும் முதல் 80 ரன்களை அடிக்கும் வரை தூக்கி அடிக்காமல், கவனமாக ரன் எடுத்ததையும் குறிப்பிட்டார்.

விலை 25 கோடி

விலை 25 கோடி

இன்று கபில் தேவ் ஐபிஎல் ஏலத்தில் இருந்தால், அவர் 25 கோடி வரை விலை போவார் என கூறி கவாஸ்கர் அனைவரையும் திகைக்க வைத்தார். கபில் தேவ் ஆல்-ரவுண்டர் என்பதோடு அந்த காலத்தில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் இருந்தார்என்பதால் கவாஸ்கர் இப்படி கூறினார்.

கபில் தேவ் சிரித்தார்

கபில் தேவ் சிரித்தார்

இதை கேட்டு கபில் தேவ் சிரித்து விட்டார். அவ்வளவு பணத்தை எல்லாம் நான் நினைத்து கூடப் பார்த்தது இல்லை என எளிமையாக கூறினார் கபில் தேவ். ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு போன வீரர் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். அவரது மதிப்பு 14.50 கோடி ஆகும்.

Story first published: Thursday, December 20, 2018, 19:03 [IST]
Other articles published on Dec 20, 2018
English summary
Gavaskar praises Kapil Dev says IPL teams would buy him for 25 crores
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X