இது போதாது... இன்னும் வளரணும் ப்ரோ... அஸ்வினை கலாய்த்த கவாஸ்கர்

Posted By:

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி நாள் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வந்தது.
இந்த போட்டியின் போது இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் அஸ்வின் மற்றும் புஜாரா குறித்து பேசி இருக்கிறார்.

மேலும் அவர் இந்திய வீரர்களின் விளையாட்டு திறமை குறித்து பேசியுள்ளார். அவர் அஸ்வின் குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆகியிருக்கிறது.

இதனால் கவாஸ்கருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் கவாஸ்கருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

டிரா

டிரா

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி நாள் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளுக்கு 299 ரன்கள் எடுத்த போது ஐந்தாவது நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று கைப்பற்றியது.

பீல்டிங் மோசம்

பீல்டிங் மோசம்

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிலர் மிகவும் மோசமாக பீல்டிங் செய்தார்கள். இதன் காரணமாக நிறைய முக்கியமான விக்கெட்டுகள் கை நழுவிப்போனது. மேலும் ஸ்லிப்பில் நின்ற வீரர்கள் சிலரும் முக்கிய விக்கெட்டுகள் சிலவற்றை தவறவிட்டார்கள். ஒருவேளை இந்த விக்கெட்டுக்களை எடுத்து இருந்தால் இந்தியா வெற்றிபெற்று இருக்கும்.

புஜாரா குறித்து கலாய்

புஜாரா குறித்து கலாய்

இந்த நிலையில் கமெண்டரி செய்து கொண்டு இருந்து கவாஸ்கர் புஜாரா குறித்து பேசினார். அதில் ''புஜாரா ஏன் இப்படி ஓடுகிறார். அவர் ஓடுவதை பார்த்தால் கார் ஓட்டுபவர் 'ஹேண்ட் பிரேக்' போட்டுவிட்டு ஓட்டுவதை போல இருக்கிறது. மிகவும் மெதுவாக ஓடுகிறார்'' என்று கூறினார். இதை கேட்டு கமெண்டரி பாக்சில் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

இன்னும் வளரணும் தம்பி

இன்னும் வளரணும் தம்பி

அதேபோல் அவர் கமெண்டரியில் அஸ்வின் குறித்தும் பேசினார். அதில் ''அஸ்வினிடம் பீல்டிங் செய்வதில் வளர வேண்டும் என்ற ஆசையும் நோக்கமும் இருக்கிறது. ஆனால் முன்னேற்றம் கொஞ்சம் கூட இல்லை. அவர் இன்னும் மாற வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். கவாஸ்கரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

Story first published: Thursday, December 7, 2017, 12:49 [IST]
Other articles published on Dec 7, 2017
Please Wait while comments are loading...