For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் கோலிக்கு நாலு வருசமாகியும் பீல்டிங் நிறுத்த வரல, பௌலர மாத்த தெரியல

மும்பை : சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் கிரிக்கெட் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இங்கிலாந்து தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததை பற்றி பல முறை பேசிவிட்ட அவர், இப்போது கேப்டன் கோலியின் தலைமை பற்றி விமர்சித்து உள்ளார்.

குறிப்பாக, கோலி பீல்டிங்கில் சரியான இடத்தில் வீரர்களை நிறுத்துவது மற்றும் பந்துவீச்சை சரியான நேரத்தில் மாற்றுவது குறித்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

கோலி இன்னும் கத்துக்கணும்

கோலி இன்னும் கத்துக்கணும்

"விராட் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். தென்னாபிரிக்காவிலும் பார்த்தோம், இப்போது இங்கிலாந்திலும் பார்த்து விட்டோம். சில சமயம் அவர் சரியான இடத்தில் பீல்டிங் நிறுத்தியிருந்தால், பந்துவீச்சை மாற்றி இருந்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அது அவரிடம் இல்லை. அவர் தலைமை ஏற்று இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. எனவே, அங்கங்கே அனுபவமின்மை வெளிப்படத்தான் செய்யும்" என கூறினார். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், கோலி டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்று இரண்டு ஆண்டுகள் அல்ல, நான்கு ஆண்டுகள் ஆகிறது.

ரவி சாஸ்திரி பற்றி..

ரவி சாஸ்திரி பற்றி..

ரவி சாஸ்திரி தொடரை இழந்த நிலையில், இப்போதுள்ள இந்திய அணிதான் சிறந்த இந்திய அணி என கூறினார். கடந்த 15-20 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த அணி சாதித்துள்ளது என மொக்கையான ஒரு தகவல் சொன்னார். அது பலராலும் மறுக்கப்பட்டு, ரசிகர்களால் இணையதளத்தில் ஆதாரத்தோடு கிழித்து தொங்கவிடப்பட்டது.

கவாஸ்கர் ஆதரவு

கவாஸ்கர் ஆதரவு

இது பற்றி பேசிய கவாஸ்கர், "ரவி இப்படி சொன்னது அணியின் நம்பிக்கையை பலப்படுத்தவே இருக்கும் என நான் நினைக்கிறேன். அவர் இதற்கு முன் இருந்த அணிகளை குறை சொல்வதற்காக இதை கூறி இருக்க மாட்டார் என நம்புகிறேன்" என கூறினார்.

கோலி எப்போதான் கற்றுக் கொள்வார்

கோலி எப்போதான் கற்றுக் கொள்வார்

சுமார் நான்கு ஆண்டுகள் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து விட்ட கோலி, எப்போதுதான் சரியான பீல்டிங் இடங்கள், சரியான நேரத்தில் பந்துவீச்சு மாற்றுதல் போன்றவற்றை கற்றுக் கொள்வார்? இந்த கேள்விக்கு யார் தான் பதில் கூறுவார்கள்? தோனி இருந்த போது ஒரு நாளாவது இதைப் பற்றியெல்லாம் நாம் யோசித்து இருக்கிறோமா? கோலி தலைமையில் நிறைய பிழை உள்ளது. அவர் விரைந்து சரி செய்து கொள்வது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது.

Story first published: Friday, September 14, 2018, 17:55 [IST]
Other articles published on Sep 14, 2018
English summary
Gavaskar thinks Kohli needs to learn fielding placements and bowling changes
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X