For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8 வருடத்திற்கு பின் வந்தும்.. கொஞ்சம் கூட மாறவில்லை.. ஆரம்பத்திலேயே ஸ்ரீசாத் ஏற்படுத்திய சர்ச்சை!

திருவனந்தபுரம்: 8 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டு வந்து இருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாத்தின் செயல்பாடுகள் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் மிக முக்கியமான பவுலராக இருந்தவர் ஸ்ரீசாத். 2011 உலகக் கோப்பையில் இந்திய அணியில் ஸ்ரீசாத் முக்கியமான பவுலராக வலம் வந்தார்.

ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த ஸ்ரீசாந்த் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது , 2016ல் திருவனந்தபுரம் சட்டசபைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தது என்று பிசியாக இருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீசாத் மீதான தடை காலம் முடிவிற்கு வந்த நிலையில் மீண்டும் முதல்தர போட்டிகளில் அவர் ஆடி வருகிறார்.

மனஉளைச்சல்.. 5 மாதங்களாக மனைவியை பார்க்கவில்லை.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் இப்படி ஒரு சிக்கலா?மனஉளைச்சல்.. 5 மாதங்களாக மனைவியை பார்க்கவில்லை.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் இப்படி ஒரு சிக்கலா?

ஸ்ரீசாத்

ஸ்ரீசாத்

சையது முஸ்டாக் கோப்பை போட்டிக்கான கேரளா அணியில் ஸ்ரீசாத் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வலைப்பயிற்சியில் ஸ்ரீசாத் ஈடுப்பட்டு வருகிறார். வலைப்பயிற்சியில் பவுலிங் செய்து வரும் ஸ்ரீசாத் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

பழைய ஸ்டைல்

பழைய ஸ்டைல்

கிட்டத்தட்ட தனது பழைய பவுலிங் ஸ்டைலை ஸ்ரீசாத் மீண்டும் பெற்றுவிட்டார் என்றுதான் கூற வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் களத்தில் அவரின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது 37 வயதாகும் இவர் களத்தில் மிகவும் கோபமாக காணப்படுகிறார்.

 இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

இளம் வீரர்களின் விக்கெட்டை எடுத்துவிட்டு அவர்களை கடுமையாக திட்டுகிறார். ஒவ்வொரு பந்தும் போட்டுவிட்டு பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜ் செய்கிறார். இந்திய அணியில் விளையாடிய போதும் ஸ்ரீசாத் இப்படித்தான் செய்து வந்தார். ஆனால் தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் வந்தும் கூட அவர் சாந்தமாக ஆடுவது இல்லை.

கோபம்

கோபம்

முதல்முறை சையது முஸ்டாக் கோப்பையில் ஆடும் இளம் வீரர்களை ஊக்குவிக்காமல் தேவையின்றி அவர்களை ஸ்ரீசாத் சீண்டுகிறார். ஸ்ரீசாத்தின் கோபம் ஒரு காலத்தில் நன்றாக இருந்தாலும், இப்போது அவரின் கோபம் அதிர்ச்சி அளிக்கிறது. மீண்டும் இந்திய அணியில் இணையும் விருப்பத்தில் ஆடும் ஸ்ரீசாத் கோபம் மீது கவனம் செலுத்தாமல் ஆட்டம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

Story first published: Friday, January 1, 2021, 14:03 [IST]
Other articles published on Jan 1, 2021
English summary
Getting angry with same state players in Syed Mushtag Ali Cup is not good for Sreesanth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X