For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று உதயமாகிறது மாஸ்டர்ஸ் டி20 கிரிக்கெட் தொடர்! களம் காணப்போகும் லாரா, கில்கிறிஸ்ட்

By Veera Kumar

துபாய்: கில்கிறிஸ்ட், லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் என்ற பெயரிலான டி20 கிரிக்கெட் தொடர் அதிகாரப்பூர்வமாக இன்று ஆரம்பமாக உள்ளது.

ஆஸ்திரேலிய மாஜி கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் நிறுவனமான ஜிஎம் ஸ்போர்ட்ஸ், இந்த விளையாட்டு தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Gilchrist, Lara likely to play in new T20 tournament - Masters Champions League

ஐபிஎல் டி20 போட்டிகளில் இளம் வீரர்கள் ஆடுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சச்சின், பாண்டிங், டிராவிட் போன்ற மாஜி ஜாம்பவான்கள் ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும்தான் செயல்படுகின்றனர். ஆனால், அந்த பிரபலங்களின் ஆட்டத்தை மீண்டும் பார்க்க ரசிகர்களுக்கு வழி செய்து கொடுக்கிறது மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக்.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள்படி, ஆலன் பார்டர், லாரா, கில்கிறிஸ்ட், ரமீஸ் ராஜா போன்ற மாஜி முன்னணி வீரர்கள் இந்த தொடரில் ஆட உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த தொடருக்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐசிசியும் இசைவு தெரிவித்துள்ளது. இப்போட்டித் தொடரில் யார் யார் ஆட உள்ளனர். போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது போன்ற விவரங்களை இன்றைய தொடக்க விழா நிகழ்ச்சியின்போது டீன் ஜோன்ஸ் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story first published: Wednesday, June 3, 2015, 11:40 [IST]
Other articles published on Jun 3, 2015
English summary
There is one more Twenty20 cricket league set to be launched. And it will be played in the United Arab Emirates (UAE) with some of the past stars in action.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X