கிரிக்கெட் பார்க்க வந்த அம்பானி, சுந்தர் பிச்சை.. லண்டனில் திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள்?

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் தி ஹண்ட்ரட் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டி20 கிரிக்கெட்டையே கொஞ்சம் மாற்றி, ஒரு இன்னிங்ஸ்க்கு 100 பந்துகள் என்ற வகையில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் லண்டன் ஸ்ப்ரிட் அணியும், மான்செஸ்டர் மேன்ஸ் அணியும் மோதின.

காமன்வெல்த்தில் இந்தியா அபாரம்.. குத்துச்சண்டையில் 6 பதக்கம் உறுதி.. வெற்றியுடன் தொடங்கிய பிவி சிந்துகாமன்வெல்த்தில் இந்தியா அபாரம்.. குத்துச்சண்டையில் 6 பதக்கம் உறுதி.. வெற்றியுடன் தொடங்கிய பிவி சிந்து

லண்டன்

லண்டன்

டாஸ் வென்று முதலில் விளையாடிய லண்டன் ஸ்பிரிட்ஸ் அணி 100 பந்துகள் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் மார்கன் அதிகபட்சமாக 37 ரன்களும், பொலார்ட் 34 ரன்களும் விளாசினர். இதனையடுத்து களமிறங்கிய மான்செஸ்டர்ஸ் அணி, 97 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதில் கேப்டன் பட்லர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கால்பந்து வீரர் ஹாரி கேன்

கால்பந்து வீரர் ஹாரி கேன்

இந்தப் போட்டியை பல பிரபலங்கள் கண்டு களித்தனர். இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டன் ஹாரி கேன் போட்டியை நேரில் கண்டு களித்தார். அத்துடன் அவரும் மைதானத்திற்கு இடைவெளியின் போது வந்து சிக்சர் அடித்து அசத்தினார். அதன் பிறகு போட்டியின் போது வர்ணனையாளராகவும் ஹாரி கேன் பணி புரிந்தார்.

சந்திப்பு

சந்திப்பு

இதனைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த இரண்டு ஜாம்பவான்களான முகேஷ் அம்பானியும், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சுந்தர் பிச்சையும், இந்தப் போட்டியை நேரில் கண்டு களித்தனர். அப்போது இருவருடன் இணைந்து ரவி சாஸ்த்ரி எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் பரவி வருகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்த நிலையில் தான், காலில் எப்போதும் சக்கரம் கட்டி சுழலும் அளவுக்கு பிஸியாக இருக்கும் இருவர் ஒரே நேரத்தில் சந்தித்து இருப்பது எதிர்ச்சையாக நடப்பது இல்லை என்று நம்பப்படுகிறது. சுந்தர் பிச்சைக்கும் கிரிக்கெட் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஐபிஎல் போட்டிக்கான டிஜிட்டல் உரிமையை முகேஷ் அம்பானி கைப்பற்றிய நிலையில், அதனை ஒளிபரப்பு செய்வதற்காக ஒரு பிரத்யேக ஆப்பை உருவாக்க உள்ளார். இது சம்பநதமாக தான் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் அம்பானி பேசி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Google CEO sundar pichai and Mukesh ambani watched cricket match – Details கிரிக்கெட் பார்க்க வந்த அம்பானி, சுந்தர் பிச்சை.. லண்டனில் திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள்?
Story first published: Wednesday, August 10, 2022, 14:06 [IST]
Other articles published on Aug 10, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X