For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO: மகிழ்ச்சி...!! துள்ளி குதித்த விராட் கோலி... வெளியான வைரல் வீடியோ

சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வென்று முதல் வெற்றியை பெற்றது, மகிழ்ச்சியின் உச்சத்திற்கு என்னை கொண்டு சென்றது என்கிறார் கோலி.

மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 173 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

1
45904

அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு 19 ரன்களில் பார்த்திவ் படேல் அஸ்வின் சூழலில் வெளியேறினார். அடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ் பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்தார்.

கிடைத்தது வெற்றி

கிடைத்தது வெற்றி

கோலி (67) சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் களமிறங்கி டி வில்லியர்ஸ் உடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் டி வில்லியர்ஸ் (59), ஸ்டோனிஸ் (28) இருவரும் பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தனர்.

மகிழ்ச்சியில் கோலி

ஆட்டநாயகனாக டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பெற்ற அந்த தருணத்தில் கோலி துள்ளிக்குதித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலி மகிழ்ச்சி

கோலி மகிழ்ச்சி

ஐபிஎல் தொடரில் பெற்ற முதல் வெற்றி குறித்து கேப்டன் கோலி கூறியதாவது: இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றி. மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது.

தவிர்க்க முடியாத தோல்விகள்

தவிர்க்க முடியாத தோல்விகள்

துரதிஷ்டவசமாக, நாங்கள் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருந்தோம். அதில் சில போட்டிகளில் தவிர்க்க முடியாத தோல்வி. மற்றவை ஜெயித்திருக்க வேண்டியவை.

களத்தில் வென்றோம்

களத்தில் வென்றோம்

தோல்விக்கு காரணம் நாங்கள் இதுவரை ஒரு அணியாக செயல்பட தவறியது தான். இந்த போட்டியில் நாங்கள் அதனை நிறுத்திகொண்டு மீண்டும் களத்தில் இறங்கினோம். வென்றோம் என்றார்.

Story first published: Sunday, April 14, 2019, 10:51 [IST]
Other articles published on Apr 14, 2019
English summary
Great feeling to get across the line says Kohli after the victory.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X