For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட்… புதிய மைதானத்தில் களம் காணும் இந்தியா

Recommended Video

2வது டெஸ்ட்: புதிய மைதானத்தில் களம் காணும் இந்தியா- வீடியோ

பெர்த் : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது. டி20 போட்டித் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.

அதன்பின்னர், அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையில் இந்திய அணியிலும் வேகப்பந்துவீச்சும், சுழற் பந்துவீச்சும் அமைந்தது, வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக நாளை பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியான மைதானம் என்று கருதப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

அதற்கேற்றவாறு, வழக்கமான பெர்த் டபிள்யுஏசிஏ மைதானத்தில் நடை பெறாமல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆப்டஸ் என்ற மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பதோடு, பந்துகள் முன் எப்போதும் இல்லாத வகையில் நன்கு பவுன்ஸ் ஆகும் என்பதால், பேட்ஸ் மேன்களை காட்டிலும் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்.

விராட் கோலி பேட்டி

விராட் கோலி பேட்டி

மைதானம் குறித்தும், 2வது டெஸ்ட் போட்டிக்கான வியூகம் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, இந்த போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்கொள்ள உள்ளதாக கூறினார். முதன்முறையாக போட்டி நடைபெறுவதால் மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும் என்று மிகுந்த ஆர்வமுடன், இந்திய அணியினரும் உள்ளதாகவும் கோலி தெரிவித்தார்.

ரசிகர்கள் நம்பிக்கை

ரசிகர்கள் நம்பிக்கை

செயற்கை மைதானத்தில் இந்திய அணியின் செயல்பாடுகளில் வேகம் குறைவு என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் உள்ள நிலையில் இயற்கையாக அமைக்கப் பட்டுள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுவதால் போட்டியின் முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமே என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

மீண்டும் களத்தில் அதே 11 பேர்

மீண்டும் களத்தில் அதே 11 பேர்

இதனிடையே, பெர்த் டெஸ்ட் ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய அணி, அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்தாலும் அணியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 13, 2018, 18:06 [IST]
Other articles published on Dec 13, 2018
English summary
most Indian teams of the past would be wary of a green top but the virat kohli led side will see it as an opportunity to bulldoze the Australia. The second Test begins on a pitch offering plenty of pace and bounce at the brand new Optus Stadium, here Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X