For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"எதிர்பார்ப்புகள் நொறுங்கியது..."..! இந்திய அணியில் இடம் கிடைக்காததால் நொந்துபோன ராகுல்..

மும்பை: அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான ஹர்திக் பாண்டியா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் கலக்கிய மற்றொரு ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இவருக்கா 6 வருஷம் வாய்ப்பு தரல.. அயர்லாந்து தொடரில் ராகுல் திரிபாதி எண்ட்ரி.. உணர்ச்சிப்பூர்வ பதில் இவருக்கா 6 வருஷம் வாய்ப்பு தரல.. அயர்லாந்து தொடரில் ராகுல் திரிபாதி எண்ட்ரி.. உணர்ச்சிப்பூர்வ பதில்

சாம்பியன் வீரர்

சாம்பியன் வீரர்

குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர், ஆல்ரவுண்டர் ராகுல் திவாட்டியா. லேக் ஸ்பின்னர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனாக திகழும் ராகுல் திவாட்டியா, டேவிட் மில்லருடன் இணைந்து குஜராத் அணிக்கு ஒரு தரமான ஃபினிஷராக இருந்துள்ளார். 16 போட்டியில் விளையாடிய அவர் 217 ரன்களை விளாசி உள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 147 என்ற அளவில் உள்ளது.

கடைசியில் 2 சிக்சர்

கடைசியில் 2 சிக்சர்

குறிப்பாக ராகுல் திவாட்டியா பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம், ரசிகர்களால் மறக்க முடியாதவை. 2 பந்துக்கு 12 ரன்கள் அடிக்க வேண்டும் என தேவைப்பட்ட நிலையில், ஓடியன் ஸ்மித் பந்தை தொடர்ந்து 2 சிக்சருக்கு அடித்து வெற்றியை தேடி தந்துள்ளார். பந்துவீச்சிலும் நெருக்கடி அளிக்க கூடியவர்.

ஐஸ்மேன்

ஐஸ்மேன்

ராகுல் திவாட்டியாவை ஐஸ் மேன் என்றும், ராகுல் திவாட்டியா உடலில் ரத்தம் ஓடுகிறதா இல்லை ஐஸ் ஓடுகிறதா, குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றால், அதற்கு முக்கிய காரணம் ராகுல் திவாட்டியாகவா தான் இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பாராட்டினார். இதனால் ராகுல் திவாட்டியா தென்னாப்பிரிக்க தொடரில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ராகுல் திவாட்டியா வேதனை

ராகுல் திவாட்டியா வேதனை

ஆனால், அந்த தொடரில் இடம்பெறவில்லை. இதனால் டெஸ்ட் அணி இங்கிலாந்தில் இருக்கும் நிலையில், இரண்டாவது டி20 அணி அயர்லாந்துக்கு செல்கிறது. இந்த அணியிலிரும் ராகுல் திவாட்டியா இடம்பெறவில்லை. இதனால் நொந்து போன ராகுல் திவாட்டியா, எதிர்பார்ப்புகள் காயத்தை ஏற்படுத்துவதாக பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, June 16, 2022, 11:34 [IST]
Other articles published on Jun 16, 2022
English summary
GT all rounder Rahul tewatia is snubbed from Playing in indian team"எதிர்பார்ப்புகள் நொறுங்கியது..."..! இந்திய அணியில் இடம் கிடைக்காததால் நொந்துபோன ராகுல்..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X