For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிபிஎல் 2020 தொடர் : 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜமாய்க்கா தாலவாசை வீழ்த்திய குயானா அமேசான் வாரியர்ஸ்

ட்ரினிடாட் : கரீபியன் பிரீமியர் லீக் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில் இந்த தொடரின் 8வது போட்டியில் குயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமாய்க்கா தாலவாஸ் அணிகள் மோதின.

Recommended Video

CPL 2020: Match 6 | TKR VS JT | Narine powers Trinbago | OneIndia Tamil

இந்நிலையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் குயானா அமேசான் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த குயானா அமேசான் வாரியர்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை அடித்த நிலையில், அடுத்ததாக களமிறங்கிய ஜமாய்க்கா தாலவாஸ் அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 104 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

8வது சீசன் துவக்கம்

8வது சீசன் துவக்கம்

மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 8வது சீசன் கடந்த 18ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் மாதம் 10ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்று மொத்தம் 33 போட்டிகளில் மோதவுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

வெற்றி பெற்ற குயானா அமேசான் வாரியர்ஸ்

வெற்றி பெற்ற குயானா அமேசான் வாரியர்ஸ்

டிரினிடாட் மற்றும் டோபாகோ ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் தொடரின் 8வது போட்டி குயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமாய்க்கா தாலவாஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. ட்ரினிடாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜமாய்க்கா தாலவாஸ் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

சிறப்பாக பௌலிங் போட்ட வீரர்கள்

சிறப்பாக பௌலிங் போட்ட வீரர்கள்

இதையடுத்து பேட்டிங்கை துவங்கிய குயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பிரான்டன் கிங் மற்றும் சந்திரபால் ஹேமராஜ் முறையே 29 மற்றும் 21 ரன்களை அடித்தனர். 5 ஓவர்களின் முடிவில் அணியின் ஸ்கோர் 55ஆக இருந்தது. தாலவாஸ் அணியின் பௌலர்கள் முஜிப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கார்லோஸ் பிரெத்வெயிட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி குயானாவின் ரன்ரேட்டை 118ஆக குறைத்தனர்.

14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

இதையடுத்து களமிறங்கிய ஜமாய்க்கா அணி வீரர்கள் சொற்ப ரன்களிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 4 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதைடுத்து களமிறங்கிய ஆன்ட்ரூ ரஸ்ஸல் அவுட்டாகாமல் 52 ரன்களை எடுத்து அணியை காப்பாற்ற முற்பட்டார். ஆயினும் தாலவாஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

Story first published: Sunday, August 23, 2020, 11:54 [IST]
Other articles published on Aug 23, 2020
English summary
Guyana Amazon Warriors beat Jamaica Tallawahs by 14 runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X