For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?

மும்பை : இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என அனைத்திலும் கலக்கி வருகிறார். மேலும் புதிய கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்.

ஆனால் ஹர்திக் பாண்டியா பேட்டியளிக்கும் போது இந்திய அணியின் அடுத்த தோனியே நான்தான். என்னை சுற்றியே இந்திய அணி இயங்கி வருகிறது என்பதைப் போல் பில்டப் கொடுத்து வருகிறார்.

இது தான் ரசிகர்களை சற்று கடுப்படையச் செய்துள்ளது.நேற்று வெற்றிக்குப் பிறகு பாண்டியா பேசியபோதும் அவ்வாறு தான் இருந்தது.

சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது? சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?

பேட்டிங்கில் மாற்றம்

பேட்டிங்கில் மாற்றம்

அதில் நான் எப்போதுமே சிக்ஸர் அடிப்பதை மகிழ்ச்சியாக செய்வேன். அதுதான் என்னுடைய வாழ்க்கை. ஆனால் இப்போது நான் கொஞ்சம் மாறி விட்டேன் இப்போதெல்லாம் பார்ட்னர்ஷிப் மீது நம்பிக்கை வந்திருக்கிறது. என்னுடன் விளையாடும் சக வீரர்களுக்கு நான் இருக்கிறேன் என்று அவர்களுக்கு உறுதி கொடுக்க நினைக்கிறேன். இப்போது உள்ள அணியில் அனைத்து வீரர்களை விட நான் தான் அதிக போட்டிகளில் விளையாடியிருக்கிறேன்.

 ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது

ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது

நெருக்கடியை எப்படி சமாளிக்க வேண்டும்? எப்படி அமைதியாக விளையாட வேண்டும் என்பது குறித்து நான் கற்றுக் கொண்டுள்ளேன். இதனால் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. ஏனென்றால் நான் இப்போது புதிய பொறுப்பை எடுத்து அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். புதிய பந்தை பயன்படுத்தும் பொறுப்பு கூட எனக்கு வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் மற்ற யாரும் அந்த கடினமான பொறுப்பை ஏற்று செய்ய நான் விரும்பவில்லை.

கற்று கொண்டேன்

கற்று கொண்டேன்

என் அணிக்காக நான் முதன்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். புது பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து பல யுத்திகளை கற்றுக் கொண்டுள்ளேன். பேட்டிங்கில் நான் கீழ் வரிசையில் இறங்குவது குறித்து நான் கவலைப்படவில்லை. ஏற்கனவே அந்தப் பணியை தோனி செய்து கொண்டிருந்தார். நான் அப்போது இளம் வீரராக இருந்தேன்.

தோனியின் பொறுப்பு

தோனியின் பொறுப்பு

அதனால் மைதானத்தின் அனைத்து பக்கமும் தூக்கி தூக்கி அடிப்பேன். ஆனால் இப்போது தோனி அணியில் இல்லை. இதனால் அனைத்து பொறுப்பும் என் மீது விழுந்து விட்டது. இது குறித்து நான் கவலைப்படவில்லை. எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைக்கிறது. இதனால் நான் மெதுவாக விளையாடுவது குறித்து கவலைப்படவில்லை என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

Story first published: Thursday, February 2, 2023, 17:23 [IST]
Other articles published on Feb 2, 2023
English summary
Hardik Pandya on his new role in batting and bowling by comparing wth ms dhoni தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X