நடிகையுடன் காதல்.. ஒப்புக் கொண்ட ஹர்திக் பண்டியா! அட.. “அரிமா நம்பி” படத்தில் வர்றவங்க தானே இது!!

Hardik Pandya engaged to Natasha Stankovic in speedboat

மும்பை : பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பண்டியா நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்த தன் காதல் விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

நடாஷா ஸ்டான்கோவிக் என்ற செர்பிய நாட்டை சேர்ந்த நடிகையை தான் ஹர்திக் பண்டியா காதலித்து வருகிறார்.

தன் காதலை சரியாக 2020 துவங்கிய உடன் உலகுக்கு அறிவித்து அதிரடி காட்டி இருக்கிறார் அவர். நடாஷா ஸ்டான்கோவிக் தமிழ் படமான அரிமா நம்பி படத்தில் தோன்றி இருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவலாக இருந்தது.

எந்த டீமும் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை.. சைலன்ட்டாக ஷாக் கொடுத்த இந்திய வீரர்கள்!

பண்டியா காயம்

பண்டியா காயம்

ஹர்திக் பண்டியா கடந்த சில மாதங்களாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டு, பின் அதில் இருந்து மீண்டு வருகிறார்.

கிசுகிசு

கிசுகிசு

நீண்ட நாட்களாகவே அவர், நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலிக்கிறார் என்ற கிசுகிசு வலம் வருகிறது. எனினும், இருவரும் இதை ஒப்புக் கொள்ளவில்லை. இருவரும் சாதாரண நண்பர்கள் போலவே காட்டிக் கொண்டனர்.

View this post on Instagram

Starting the year with my firework ❣️

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

புகைப்படம் பதிவிட்டார்

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு துவங்கும் போது, நள்ளிரவு 12 மணிக்கு ஹர்திக் பண்டியா இன்ஸ்டாகிராமில், நடாஷா ஸ்டான்கோவிக் உடன் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

வானவேடிக்கை

வானவேடிக்கை

அதன் தலைப்பாக, "வருடத்தை என் வானவேடிக்கையுடன் துவங்குகிறேன்" என பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

ரசிகர்கள் தேடி வருகின்றனர்

ரசிகர்கள் தேடி வருகின்றனர்

சுமார் 12 லட்சம் பேர் அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளனர். பலரும் யார் இந்த நடாஷா ஸ்டான்கோவிக் என தேடி வருகின்றனர். இவர் அதிக பிரபலமான நடிகை அல்ல. மிகச் சில படங்களில் நடனம் ஆடி உள்ளார்.

நடனம்

நடனம்

செர்பிய நாட்டை சேர்ந்தவர் என்றாலும், இந்தியாவில் விளம்பரங்களிலும், பாலிவுட் படங்களில் பாடல்களிலும் நடனம் ஆடி வருகிறார். இரண்டு தென்னிந்திய படங்களிலும் அவர் பாடல்களில் நடனம் ஆடி உள்ளார்.

அரிமா நம்பி படத்தில்..

அரிமா நம்பி படத்தில்..

அதில் ஒன்று தான் அரிமா நம்பி. அந்தப் படத்தில் வரும் "நானும் உன்னில் பாதி" என்ற பாடலில் அவர் நடனம் ஆடி உள்ளார். எனினும், அவர் தமிழ்நாட்டில் பிரபலமாகவில்லை.

பிக் பாஸ்

பிக் பாஸ்

2014இல் ஹிந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற "நாச் பாலியே" என்ற நடன நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஹர்திக் பண்டியா நிலை

ஹர்திக் பண்டியா நிலை

ஹர்திக் பண்டியா காயம் முழுமையாக குணமாகி உள்ள நிலையில், மீண்டும் விரைவில் போட்டிகளில் ஆட இருக்கிறார். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் நியூசிலாந்து சென்று இந்தியா ஏ அணியில் ஆட இருக்கிறார்.

இந்திய அணியில் வாய்ப்பு

இந்திய அணியில் வாய்ப்பு

அப்போது சிறப்பாக ஆடும்பட்சத்தில் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Hardik Pandya revealed his girlfriend exactly after the birth of the year 2020.
Story first published: Wednesday, January 1, 2020, 17:34 [IST]
Other articles published on Jan 1, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X