For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாலு மாசமா மகனை பாக்கல... குடும்பத்த பாக்கணும்... ஏக்கத்தில் டி20 தொடர் நாயகன்!

சிட்னி : ஐபிஎல் 2020 மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் நிலையில் 4 மாதங்களாக நாட்டை விட்டு வெளியேறி ஆடிவருகின்றனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக தன்னுடைய மகனையும் குடும்பத்தினரையும் பார்க்காமல் உள்ளது மனஉளைச்சலை தந்துள்ளதாகவும் அவர்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவதாகவும் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கூறினார்.

டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, அந்த விருதை தனது மகன், மற்றும் குடும்பத்தினருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

அது போன்ற தவறுகளை ஏற்கவே முடியாது.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட கோலி.. மைதானத்தில் பரபர சம்பவம்! அது போன்ற தவறுகளை ஏற்கவே முடியாது.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட கோலி.. மைதானத்தில் பரபர சம்பவம்!

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஐபிஎல் 2020 தொடர் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டை விட்டு வெளியேறி யூஏஇயில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள், தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடருக்காக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்துள்ளனர்.

டி20 தொடர் இந்தியா வெற்றி

டி20 தொடர் இந்தியா வெற்றி

ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வரும் 17ம் தேதி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியுடன் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. இந்த தொடர் ஜனவரி மாதத்தின் மத்தியில் முடிவடையவுள்ளது. இதையடுத்தே வீரர்கள் இந்தியா திரும்பவுள்ளனர்.

மன உளைச்சலை தந்தது

மன உளைச்சலை தந்தது

இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினரை பிரிந்து குறிப்பாக தன்னுடைய மகனை பிரிந்து 4 மாதங்கள் இருந்தது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர்களுடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மேலும் டி20 தொடரின் தொடர் நாயகன் விருதை அவர் தனது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு டெடிகேட் செய்துள்ளார்.

குடும்பத்தினர் வெற்றிக்கு காரணம்

குடும்பத்தினர் வெற்றிக்கு காரணம்

தன்னுடைய வெற்றிக்கு தன்னுடைய குடும்பத்தினரும் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும்தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். தான் டெஸ்ட் போட்டிகளின்போது ஆஸ்திரேலியாவில் இருக்க மாட்டேன் என்றும் அவர் மேலும் கூறினார். உடனடியாக தன்னுடைய குடும்பத்தினரை பார்க்கும் ஆவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Wednesday, December 9, 2020, 10:56 [IST]
Other articles published on Dec 9, 2020
English summary
Won't be available for the Test matches, wants to spend some time with family -Hardik Pandya
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X