சிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. எங்க இருந்தாலும் இதை விடாதீங்கம்மா.. கப்பு முக்கியம் கவுரு!!

டெல்லி: இந்திய மகளிர் டி 20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், உடற் பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. போட்டித் தொடர்கள் ரத்தாகி விட்டன. காரணம் இந்த கொரோனா வைரஸ் பரவல். இதனால் கிரிக்கெட் வீரர்களும், வீராங்கனைகளும் வேறு வேறு வேலைகளில் கவனம் திருப்பி வருகின்றனர்.

சமீபத்தில்தான் மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் முடிவடைந்தன. துரதிர்ஷ்டவசமாக அதில் நாம் கோப்பையை வெல்ல முடியாமல் போய் விட்டது. எல்லாருக்கும் அது பெரிய ஏமாற்றம்தான்.

சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்

சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தப் போட்டித் தொடர் மூலம் ஒரு சாதனை படைத்தார். அதாவது மகளிர் டி 20 உலககக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நாம் ஒருமுறை கூட தகுதி பெற்றது இல்லை. இந்த வருடம்தான் அதை நாம் சாதித்தோம். அந்த வகையில் மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவை இட்டுச் சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையும், சாதனையும் கவுருக்குக் கிடைத்தது.

ஒரு நாள் மகளிர் உலகக் கோப்பை

ஒரு நாள் மகளிர் உலகக் கோப்பை

தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராகி வருகிறது. கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதற்கான பயிற்சி முகாம்கள் இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும் வீராங்கனைகள் வீடுகளிலும், பிற இடங்களிலும் தனித் தனியாக உடற் பயிற்சி உள்ளிட்டவற்றில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் இதை ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்திருந்தார்.

உடற்பயிற்சி செய்யும் ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் கவுர் ஒரு போட்டோவைப் போட்டுள்ளார். அதில், தான் உடற்பயிற்சி செய்வது போல போட்டுள்ளார். கூடவே, இப்போது முன்னை விட நாம் வலிமையாக, ஒரே அணியாக திகழ்கிறோம் என்று கூறியுள்ளார். இதில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இன்று மக்கள் ஊரடங்கு அமலாகியுள்ளது. அதையும் ஹர்மன்ப்ரீத் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் வீராங்கனைகள் தங்களது உடற்பயிற்சியை விட்டு விட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகத்திற்காக விளையாடுங்கள்

உலகத்திற்காக விளையாடுங்கள்

நதி போல ஓடிக் கொண்டிரு மேலும் உலகத்திற்காக விளையாடு என்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்னொரு மெசேஜ் கொடுத்துள்ளார். காலையிலேயே தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய புகைப்படத்தையும், நதி போல தொடர்ந்து ஓடிக் கொண்டிரு என்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியிருப்பது நிச்சயம் அனைவருக்கும் உற்சாகமூட்டக் கூடிய வார்த்தைதான். கொரோனாவை வென்ற கையோடு உலகக் கோப்பைக்கும் நமது மகளிர் சூப்பராக தயாராவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Harmanpreet Kaur has urged to keep the physical fitness well and play for the world
Story first published: Sunday, March 22, 2020, 11:41 [IST]
Other articles published on Mar 22, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X