For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் ஆன புதிதில் என்ன செய்தார் தெரியுமா? தோனி பற்றி அந்த முன்னாள் வீரர் ஓபன் டாக்!

மும்பை : தோனி கேப்டன் ஆன புதிதில் களத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றியும், பின்னர் எப்படி மாறினார் என்பது பற்றியும் முன்னாள் வீரர் இர்பான் பதான் வெளிப்படையாக பேசி உள்ளார்.

தன்னை அணியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் தோனி குறித்து இர்பான் பதான் பல முறை விமர்சனம் செய்து இருக்கிறார்.

இந்த நிலையில், அவர் தோனியின் கேப்டன்சி மாற்றம் குறித்து பேசி இருப்பது ஆர்வத்தை தூண்டி உள்ளது.

ரிலாக்சா விளையாடினா ஹார்ட் வொர்க் இல்லன்னு அர்த்தம் இல்ல... இர்பான் பதான்ரிலாக்சா விளையாடினா ஹார்ட் வொர்க் இல்லன்னு அர்த்தம் இல்ல... இர்பான் பதான்

கேப்டன் ஆனார்

கேப்டன் ஆனார்

தோனி 2007இல் இந்திய அணிக்கு கேப்டன் ஆனார். முதலில் டி20அணிக்கு கேப்டன் ஆனார். டி20 உலகக்கோப்பை தொடரில் கேப்டன் ஆக அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதோடு, கேப்டனாக உலகக்கோப்பை வெல்லவும் காரணமாக இருந்தார்.

கேப்டனாக தோனி

கேப்டனாக தோனி

தொடர்ந்து ஒருநாள் அணிக்கும், பின்னர் டெஸ்ட் அணிக்கும் கேப்டன் ஆனார் தோனி. கேப்டனாக தோனியின் கள செயல்பாடுகள் வெகுவாக பாராட்டப்பட்டவை. குறிப்பாக பந்துவீச்சாளர்களை அவர் கையாளும் விதம், அவர்களுக்கு யோசனை சொல்வது போன்றவை குறித்து பல வீரர்களும் கூறி உள்ளனர்.

உற்சாகம்

உற்சாகம்

இந்த நிலையில், தோனி கேப்டன்சியின் துவக்கம் முதல் அணியில் இடம் பெற்று வந்த இர்பான் பதான் அது பற்றி பேசி உள்ளார். 2007இல் முதன் முறையாக கேப்டன் பதவி என்ற பெரிய பொறுப்பை அளித்த போது தோனி மிகுந்த உற்சாகம் அடைந்ததாக கூறினார்.

அணிக் கூட்டம்

அணிக் கூட்டம்

2007 மற்றும் 2013 சாம்பியன் ட்ராபி தொடர்களின் போது அணி கூட்டம் மிகவும் சிறியதாகவே இருக்கும். வெறும் 5 நிமிடம் தான் கூட்டம் நடக்கும் என்றார் இர்பான் பதான்.கடைசி வரை தோனி நடத்திய அணிக் கூட்டங்கள் எல்லாமே சிறியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் எந்த மாற்றமும் செய்யவில்லை.

ஓடிச் செல்வார்

ஓடிச் செல்வார்

ஆனால், ஒரு விஷயம் பெரிய அளவில் மாறியது. 2௦07இல் உற்சாகம் காரணமாக விக்கெட் கீப்பிங் முனையில் இருந்து, பந்துவீச்சாளர் முனைக்கு ஓடிச் சென்று பந்துவீச்சாளரை கட்டுப்படுத்த முயல்வார். ஆனால், 2013இல் அவர் பந்துவீச்சாளர்களை அவர்களே தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள விட்டுவிட்டார் என்றார் பதான்.

இவர்களை நம்பினார்

இவர்களை நம்பினார்

மேலும், 2007இல் இருந்து 2013க்குள் மித வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களை அவர் நம்பத் துவங்கியதாகவும் கூறினார் இர்பான் பதான். சாம்பியன்ஸ் டிராபியில் முக்கிய நேரங்களில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி போட்டிகளை வென்றதாகவும் குறிப்பிட்டார்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

தோனி சுழற் பந்துவீச்சாளர்களுக்கு யோசனை கூறி விக்கெட் வேட்டை நடத்துவதில் சிறந்து விளங்குகிறார். இதைப் பற்றி பலரும் கூறி உள்ள நிலையில், இர்பான் பதான் அந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது என தான் அருகே இருந்து பார்த்ததை கூறி உள்ளார்.

Story first published: Sunday, June 28, 2020, 12:29 [IST]
Other articles published on Jun 28, 2020
English summary
How Dhoni changed between 2007 and 2013, explains Irfan Pathan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X