5 வருட பகை தீர்ந்தது.. அஸ்வினுக்கு எதிராக பாண்ட்யா போட்ட பக்கா ப்ளான்.. சாய் கிஷோர் சாதித்தது எப்படி

அகமதாபாத்: அஸ்வின் விக்கெட்டை எடுப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கை பயன்படுத்தியுள்ளார் ஹர்திக் பாண்ட்யா

Recommended Video

Ashwin-க்கு எதிராக Sai Kishore-ஐ பயன்படுத்திய Hardik Pandya

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்பின்னர் ஆடிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

ராஜ தந்திரங்கள் வீணானதே.. ஜாஸ் பட்லருக்காக சிறு மாற்றம் செய்த பாண்ட்யா.. வலையில் சிக்கியது எப்படி! ராஜ தந்திரங்கள் வீணானதே.. ஜாஸ் பட்லருக்காக சிறு மாற்றம் செய்த பாண்ட்யா.. வலையில் சிக்கியது எப்படி!

குஜராத் பவுலிங்

குஜராத் பவுலிங்

ராஜஸ்தான் அணியில் முக்கிய விக்கெட்களை வீழ்த்த ஹர்திக் பாண்ட்யா தனி திட்டம் வகுத்திருந்தார். 8வது ஓவருக்கு வழக்கமாக பந்துவீச வேண்டிய சாய் கிஷோருக்கு வாய்ப்பே தரப்படவில்லை. தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, ரஷித் கான், ஃபெர்க்யூசன், முகமது ஷமி என சீனியர் பவுலர்கள் மட்டுமே பந்துவீசி வந்தனர்.

சொதப்பிய ராஜஸ்தான் அணி

சொதப்பிய ராஜஸ்தான் அணி

இவர்களின் பந்துவீச்சால் ரன் அடிக்க முடியாமல் திணறிய முன்னணி வீரர்களான கேப்டன் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், ஹெட்மெயர், தேவ்தத் பட்டிக்கல் ஆகியோர் ரன் ரேட்டை அதிகரிப்பதற்காக தவறான ஷாட்களை அடித்து பரிதாபமாக விக்கெட்களை பறிகொடுத்தனர்.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

இந்நிலையில் திடீரென அஸ்வின் களமிறங்கிய போது மட்டும் இளம் பவுலர் சாய் கிஷோர் வரவழைக்கப்பட்டார். 16வது ஓவரில் அவர் வீசிய 5வது பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்ற அஸ்வின் தவறான ஷாட்டை அடித்தார். இதனால் வெறும் 6 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அஸ்வின் விக்கெட்டை சாய் கிஷோர் எடுத்தவுடன் அரங்கம் முழுவதும் கூச்சல் எழுந்தது. இதற்கு காரணம் ஹர்திக் பாண்ட்யாவின் திட்டம் தான்.

5 வருட பகை கணக்கு

5 வருட பகை கணக்கு

கடந்த 2017ம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் அஸ்வினுக்கும் சாய் கிஷோருக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஆடிய சாய் கிஷோர் விக்கெட் எடுத்தவுடன் பேட்ஸ்மேனுக்கும் அவருக்கும் கலைகலப்பு ஆனது. அப்போது நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த அஸ்வினும் சாய் கிஷோருக்கு எதிராக சண்டையிட்டார்.

ஹர்திக்கின் திட்டம்

ஹர்திக்கின் திட்டம்

இதனை சரியாக புரிந்துக்கொண்ட ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின் களமிறங்கியவுடன் நேரடியாக பந்தை சாய் கிஷோரிடம் கொடுத்தார். இதன் மூலம் 5 வருட பகை கணக்கும் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்த விவகாரத்தை நினைவுக்கூர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
How Hardik pandya use Sai kishore's 4 years of vengance against Ashwin
Story first published: Monday, May 30, 2022, 16:30 [IST]
Other articles published on May 30, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X