For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னத்த சொல்றது... நான் ஊமையாகிவிட்டேன்.. நொந்து நூடுல்ஸ் ஆன அந்த இளம் கேப்டன்

சண்டிகர் : பஞ்சாப் அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வேதனையுடன் கூறியிருக்கிறார்.

சண்டிகரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில், கிறிஸ் மோரிஸ் அதிகப் பட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லிக்கு தொடக்கமே அதிர்ச்சிதான். பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர்.

அடக்கடவுளே....! பஞ்சாப் அணியிடம் தோற்ற டெல்லி அணிக்கு இப்படி ஒரு சாதனையா...? அடக்கடவுளே....! பஞ்சாப் அணியிடம் தோற்ற டெல்லி அணிக்கு இப்படி ஒரு சாதனையா...?

152 ரன்களில் ஆல்அவுட்

152 ரன்களில் ஆல்அவுட்

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பஞ்சாப் வீரர் சாம் கரண் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டெல்லி அணி, 19.2 ஓவரில் 152 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 14 ரஅன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, நடப்பு சீசனில் 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.

தொடரும் விமர்சனம்

தொடரும் விமர்சனம்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியானது மிகபெரிய பேசு பொருளாக மாறி விட்டது. வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தை டெல்லி அணி கோட்டை விட்டதாக அனைவரும் வறுத்து எடுத்துவிட்டனர்.

என்ன சொல்வது?

என்ன சொல்வது?

இது குறித்து டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:உண்மையில் இது எங்களுக்கு பெருத்த ஏமாற்றம். இந்த போட்டியில் நாங்கள் ஸ்மார்ட்டாக விளையாட வில்லை. பஞ்சாப் அனைத்து துறைகளிலும் எங்களை வென்றது.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

இது ஒரு முக்கிய போட்டி என்ற போதிலும் தோல்வியடைவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பஞ்சாப் அணியினர் மிகவும் அமைதியாக, இக்கட்டான தருணத்தில் பொறுப்புடன் ஆடினர்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

ஆனால்... எங்களது பேட்ஸ்மென்கள் அது போன்று நடந்துகொள்ள தவறி விட்டனர். முகமது சமி, சாம் கர்ர்ன் ஆகிய இருவரும் அருமையாக பந்துவீசினர். அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.

Story first published: Tuesday, April 2, 2019, 10:48 [IST]
Other articles published on Apr 2, 2019
English summary
I am really speechless, it was a crucial match says delhi capitals captain shreyas iyer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X