For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்கூலில் இருக்கும்.. ஆனா எனக்கு வரவே வராது..! ரொம்ப அலர்ஜி..! ஒரு சாதனை கேப்டனின் பள்ளி சீக்ரெட்

Recommended Video

Watch Video : Virat kohli shared his school memories

மும்பை: கல்வி பயிலும் கால கட்டத்தில், கணக்கு பாடம் என்றால் தமக்கு அலர்ஜி என்று கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். அதிக சதங்கள், அதிக ரன்கள், அதிக வெற்றிகள் என எல்லாமே அவரது கேப்டன்சியில் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக கோலி எட்டாத சாதனைகளே கிடையாது எனலாம். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாகவே கோலி இந்திய அணிக்காக பேட்டிங்கில் பல மைல் கற்களை எட்டியுள்ளார். அவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகிறது.

தத்துவ முத்து

தத்துவ முத்து

அவர் எங்கு போனாலும், என்ன பேசினாலும் அது ஹைலைட்டாக மாறி விடுகிறது. அது போல தான் அவர் ஒரு தத்துவ முத்தை உதிர்த்திருக்கிறார். பள்ளி காலங்களில் தமது கல்வியின் நிலைமை என்ன என்பதை ஜாலியாக வெளியிட்டிருக்கிறார்.

100 மதிப்பெண்

100 மதிப்பெண்

இது குறித்து கோலி கூறியிருப்பதாவது: படிப்பில் நான் ஒரு மோசமான மாணவன். குறிப்பாக கணக்கு தனக்கு சுத்தமாகவே வராது. கணக்கில் அதிகபட்சமாக இருப்பது 100 மார்க்.

எடுப்பது 3 மார்க்

எடுப்பது 3 மார்க்

ஆனால் நானோ எடுப்பது வெறும் 3 தான். கணக்கின் பின்னணியில் உள்ள சிக்கல்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த பார்முலாக்களை இதுவரை என் வாழ்வில் என்றுமே முயற்சித்ததே கிடையாது.

தேவையா என்று முடிவு

தேவையா என்று முடிவு

என் 10 வகுப்பு தேர்வை எப்படியாவது தாண்டினாலே போதும் என்று நினைத்தேன். ஏன் என்றால் அதன் பின் கணக்கு பாடம் தேவையா? இல்லையா? என்பதை முடிவு செய்து கொள்ள முடியும்.

அதிகமாக உழைத்தேன்

அதிகமாக உழைத்தேன்

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தேர்வில் பாஸ் ஆக கடினப்பட்ட அளவுக்கு கிரிக்கெட்டில் கூட கஷ்டப்பட்டதில்லை. அதாவது, கிரிக்கெட்டை விட கணித பாடத்திற்கு அதிகமாக உழைத்தேன். ஏன் என்றால் எனக்கு கணக்கு பாடம் சுத்தமாக வரவே வராது.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

2012ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு பின் என்னுடைய உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தினேன். அன்று முதல் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.

Story first published: Monday, September 9, 2019, 11:37 [IST]
Other articles published on Sep 9, 2019
English summary
I feared about maths subject in school days says Indian skipper virat kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X