For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லாராவின் சாதனையை உடைக்க கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் - நம்பிக்கையுடன் இருக்கும் ஆஸி. வீரர்!

Recommended Video

David Warner hit triple century| சேவாக்கிற்கு பின் பாகிஸ்தானை புரட்டி எடுத்த வார்னர்|

அடிலெய்டு : மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க தனக்கு மற்றொரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்நாட்டின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 335 ரன்களை குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 400 ரன்கள் அடித்த லாராவின் சாதனையை முறியடிக்க அவருக்கு 65 ரன்களே தேவைப்பட்ட நிலையில் அதை அவரால் செய்ய முடியவில்லை.

போட்டி நடைபெற்று சில தினங்களுக்கு பின்பு லாராவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட டேவிட் வார்னர், லாராவின் சாதனையை முறியடிக்க தனக்கு மற்றொரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தானுக்கு எதிராக ரன்கள் குவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிராக ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 335 ரன்களை குவித்து பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

 பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றியை தக்க வைப்பதற்காக, அந்த இன்னிங்சை டிக்ளேர் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அணியின் கேப்டன் டிம் பைனே ஆளாகியிருந்தார்.

 65 ரன்களே தேவை

65 ரன்களே தேவை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த ஆட்டக்காரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரைன் லாரா செய்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்க டேவிட் வார்னருக்கு 65 ரன்களே தேவையாக இருந்த நிலையில், ஆட்டம் டிக்ளேர் ஆனதால் அதை அவரால் செய்ய முடியவில்லை.

 இன்ஸ்டாகிராமில் புகைப்படம்

இன்ஸ்டாகிராமில் புகைப்படம்

போட்டி முடிந்த சில தினங்களில் பிரைன் லாராவை சந்திக்கும் சந்தர்ப்பம் டேவிட் வார்னருக்கு கிடைத்த நிலையில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் லாராவின் சாதனையை முறியடிக்க தனக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, December 4, 2019, 14:30 [IST]
Other articles published on Dec 4, 2019
English summary
David Warner hopes to get another chance to break Brian Lara's record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X